யுவராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : யுவராஜ் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 3 |
கவிஞன் அல்ல நான்
கவிதையேன்று நினைத்து கிறுக்குபவன் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்
**இன்னொரு இரவு...!**
பிணமென்றும் பாராது
பிய்த்து திண்ணும்
கழுகுகளாய் சில்லறை
வீசி
தேகம் சிதைத்திடும்
காமுகர் நாடும் சாமம்
நெருங்குகிறது...
கணிகையவள்
சாபம் பெற்றபடி...!
********
விடிந்தால் திருமணம்
குறைவதோ
இருபதாயிரம்!
மகள் வாழ்க்கை
என்னாகும்?!...
பதைத்திடும்
தாயுள்ளம்...!
********
வீசமுடிந்தது
வலைதான்... சிக்குவது
தன் வலையில்
மீனா?
சிங்களன் பிடியில்
தானா?!
புரியா புதிராய்
படகேறும் மீனவன்...!
********
"அப்பா..காலைல
நோட்டுப் புத்தகம் வாங்க
ரூ.300 வேணும்... டீச்சர்
அடிப்பாங்க...!" தேகம்
பிளந்திடும் வலிதாண்டி
தூக்கம் துறக்கும்
கூலியின் விழிகள்...!
********
துன்ப
* எத்தனை
வருடங்களுக்குப் பிறகு
பார்த்தாலும் ,
எத்தனை
குழந்தைகள்
பெற்றபிறகு
பார்த்தாலும் ;
* அங்கே
அழகாகவே தெரிகிறாள்
காதலி ...
இங்கேதான்
அழுதுகொண்டேயிருக்கிறது
"எங்கிருந்தாலும் வாழ்க "
என்ற காதல் ...!
எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!...
இதயம் கிழிந்திட...
உணர்வுகள் சிதைந்திட...
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!....
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!...
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!...
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்...!
நண்பர்களே நம் இணையத்திலே நான் புதிதாக இணைந்துள்ளேன்
என் கருத்துக்களையும் என் கவிதைகளையும் உங்களிடம் பகிர 100 புள்ளிகள் தேவை அதை எவ்வாறு பெறுவது??? தயவு செய்து கூறுங்கள்.,
நான் எழுதிய சிறு கவிதை உங்களுக்காய்...
உன்னை காணும் நொடியிலே
எனக்கு மரணம் என்றான் இறைவன்!!!
இப்போதே இறக்கிறேன்
என் முன் வா...
நண்பர்களே நம் இணையத்திலே நான் புதிதாக இணைந்துள்ளேன்
என் கருத்துக்களையும் என் கவிதைகளையும் உங்களிடம் பகிர 100 புள்ளிகள் தேவை அதை எவ்வாறு பெறுவது தயவு செய்து கூறுங்கள்.,
நான் எழுதிய சிறு கவிதை உங்களுக்காய்...
உன்னை காணும் நொடியிலே
எனக்கு மரணம் என்றான் இறைவன்
இப்போதே இறக்கிறேன்
என் முன் வா...
காதலை பெற்றோருக்காக தியாகம் செய்வது சரியா? தவறா?
நண்பர்கள் (2)

தானியேல் நவீன்ராசு
கும்பகோணம்,தமிழ்நாடு.

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

தானியேல் நவீன்ராசு
கும்பகோணம்,தமிழ்நாடு.
இவரை பின்தொடர்பவர்கள் (2)

தானியேல் நவீன்ராசு
கும்பகோணம்,தமிழ்நாடு.
