மகேஷ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மகேஷ்
இடம்
பிறந்த தேதி :  28-Jan-1994
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Oct-2016
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  3

என் படைப்புகள்
மகேஷ் செய்திகள்
மகேஷ் - mageshmnc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2018 11:27 am

அழகு என்றல் அது அம்மா!!
அம்மா என்று அழைப்பதால் அழகும் அழகு பெறுகின்றது!!
நமது தாய் மொழியான தமிழும் அழகு பெறுகின்றது..!

மேலும்

மெல்லினம் கொண்டவள்.. அழகே.. மேலும் எழுதுங்கள். வாழ்த்துகள்... 07-Feb-2018 1:51 pm
சரி தோழரே 07-Feb-2018 12:46 pm
அருமையான வரிகள் 07-Feb-2018 12:42 pm
உயிர்களின் உறைவிடம் அம்மா இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 11:53 am
மகேஷ் - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 11:28 am

அன்பைத் தருபவள்
அமுதாய் இனிப்பவள்
மகிழ்வைப் பொழிபவள்
மலராய் மணப்பவள்
அவள் தான் பெண்

சிலவேளை நிலையறியாது
சீறுகிறாள் சினக்கிறாள்
கனமாய்க் கதைக்கிறாள்
கண்களால் எரிக்கிறாள்

பெண்ணே ! மனதை வருடும்
மல்லிகைச் சரமா நீ, இல்லை
நெஞ்சைக் கிழித்து நிம்மதி கெடுக்கும்
கள்ளிச் செடியா நீ
யாரடி நீ ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் ஸர்பான்! ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே தானே! 25-Oct-2017 10:12 am
கருவில் சுமந்து அழகின் முழுமையாய் உருவமாக தந்த வள்ளலும் பெண் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:16 am
அன்பின் மகேஷ் ! மிக்க நன்றி 24-Oct-2017 12:10 pm
அருமை 24-Oct-2017 11:36 am
மகேஷ் - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 3:22 am

.....சிநேகிதனே....

அத்தியாயம் : 11

"என்ன அங்கேயே நின்னுட்ட...உள்ள வா மித்ரா..."

அவனது குரலில் மீண்டும் நடப்புக்கு வந்த நான் ஒவ்வொரு அடியையும் மெதுவாக வைத்தே உள்ளே சென்றேன்...

"ஹேய் இரு இரு..."என்று என் முன்னே வந்து என்னைத் தடுத்தவன்,என் கண்களிரண்டையும் பொத்திக் கொண்டான்...

"சரண் என்ன பண்ற...??.."

"அட பொறுங்க மேடம்,"என்றவாறே என்னை அவன் கைப்பிடியில் அழைத்துச் சென்றான்...

மெதுவாக என் இரு கண்களையும் அவனது கரத்திலிருந்து விடுவித்தவன்,

"இதான் என்னோட பொண்டாட்டி....இதுவரை நேரமும் நீ பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த இந்தச் சரணோட மனைவி...அவள் மட்டும் இல்லைன்னா நான் எதுவுமே இல்லை..

மேலும்

அருமை...................... 29-Nov-2017 7:14 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் தோழமையே...! 27-Oct-2017 9:58 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 27-Oct-2017 9:57 pm
நிச்சயமாக...தங்கள் மின்னஞ்சல் முகவரியினை அறியத் தந்தால் தொகுத்து அனுப்புகிறேன்...கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஐயா...! 27-Oct-2017 9:57 pm
மகேஷ் - எண்ணம் (public)
24-Oct-2017 11:31 am

எந்த நேரத்திலும் உன் கஷ்டங்களை வெளிப்படுத்தாதே
ஏனெனில் உன் கஷ்டத்தை கண்டு சிரிக்க 4 பேர் இருப்பார்கள்!

மேலும்

வாழ்வியல் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:46 pm
மகேஷ் - எண்ணம் (public)
23-Oct-2017 6:57 pm

மீசை ஏன் வளர்கிறது ஆணுக்கு தெரியாது
பெண்மை ஏன் பூக்கிறது பெண்ணுக்கு தெரியாது
சூரியன் ஏன் உதிக்கிறது பூமிக்கு தெரியாது
பூமி ஏன் சுழல்கிறது வானிற்கு தெரியாது
முதுமை ஏன் ஆகிறது வாழ்க்கைகு  தெரியாது
நாம் ஏன் வாழ்கிறோம் நமக்கே தெரியாது!!!!

மேலும்

மகேஷ் - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 3:13 pm

சத்தமின்றி நீ தந்த
முத்தத்தில்
சப்த நாளங்களும்
அடங்கிட
உன்...
மௌன மொழியை
விழி படித்து
விளங்கிட நேரம்
ஆனதும்
சட்டென கோபத்தில்
விலகிட
எத்தனிதாய்...
விரல் பிடித்து
இமை நோக்கிட
நாடித்துடிப்பு
ஒவ்வொன்றும்
நர்த்தனம் ஆடியது...
இருவரும்
ஒளி மறந்து
இமை மூடி
இதழ் குவித்து
இதயம் கலந்திட
உயிரில் ஒன்றானோம்
நீயும்...நானும்...
நாம்...என்று

மேலும்

முற்றிலும் உண்மை., 05-Oct-2017 12:39 pm
உண்மை தான்...ஆனால் உண்மையாக நேசிக்கும் இதயம் கிடைப்பது அரிது...நன்றி... 29-Sep-2017 10:54 am
நன்றி... 29-Sep-2017 10:54 am
நீ+நான்= நாம். அருமை. 29-Sep-2017 7:39 am
மகேஷ் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
18-Aug-2017 10:51 am

ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படுமா?

மேலும்

கிரிமினல் குற்றவாளிக்கு நினைவு இல்லமா? விளங்கும்! 29-Nov-2017 4:53 am
மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 10:21 am

சூரியனுக்கே குறி வெய், அப்பொழுதுதான்
விண்மீன்களை ஆவது அடைய முடியும்!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே