மூர்த்தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மூர்த்தி |
இடம் | : சிவகங்கை |
பிறந்த தேதி | : 30-May-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 6 |
நான் சவுதி அரேபியாவில் கட்டிட பொறியலாளராக பணியாற்றுகிறேன்... என் கவிதைகளுக்கு வரவேற்பு தரும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்...
பச்சையில் பிச்சை வாங்க தோன்றும்
உன்னிடம்.,
வெள்ளையில் கைப்பிள்ளையானேன்
உனக்கு.,
நீலத்தில் உலகத்தை மறந்தேன்
உன்னை கண்டு.,,
சிவப்பில் தவிப்பில் ஆனேன்
உன்னால்.,
மஞ்சளில் என்மனம் இளம்பிஞ்சானது
உன் மேல்.,
கருப்பில் பல அற்புதங்களை கண்டேன்
உன்னில்.,
பல வண்ணங்களில்
பூக்களாய் மரங்களாய் மலைகளாய் உயிரினங்களாய்
என்னை திகைப்பில் ஆழ்த்துகிறாய்...
நிலமாய் நீ இருப்பதால் தான்
நான் நிற்கிறேன்.,
காற்றாய் நீ வீசுவதால்
நான் சுவாசிக்கிறேன்.,
வானமாய் நீ வருவதால் தான்
நான் உன்னை தொட பறக்கிறேன்.,
நீராய் நீ இல்லையேல்
நான் ஏது?
இவ்வுலகில்....,
பல நூறு பூக்களுக்கு
நான் வாசம் தரும்
பூவாய் இருந்தேன்.,
அதில் ஒரு பூ
என்னை தேர்ந்தெடுத்தது.,
உலகம் தெரியாத எனக்கோ
பார்க்கும் இடமெல்லாம்
பூவாக தெரிந்ததால்..,
அப்பூவை ஏற்றேன்.,
நான் பல பூக்களுடன்
பழக கற்று கொடுத்தேன்.,
பல பூக்கள் கிடைத்ததும்
என்னுடைய
இதழ்களை சிதற் கல் ஆக்கியது.,
அப்போதுதான் தெரிந்தது
பழகியது பூவொடல்ல..,
முள்ளோடு என்று..,
இப்போது.,
பல கோடி பூக்களில்
ஒரு பூவை தேர்ந்தெடுக்க யோசிக்கிறேன்.,
நிலைமைக்கு ஏற்றாற்போல்
மாற
உன்னிடம் தான் கற்றேன்.,
உன்னை போல்
வளைந்து கொடுக்க
என்னால் முடியவில்லை.,
நெருப்பிற்கு நீ
தோழியா? எதிரியா?
ஏனெனில்
நெருப்பின் கோபத்தை
தணிக்க உன்னை இழக்கிறாய்.,
இதனால்
நீ உயினங்களுக்கு
தோழி ஆகிறாய்.,
நெருப்பிற்கு
எதிரியாகிறாய்.,
சில சமயங்களில்
நீயும் நெருப்பும்
கை கோர்த்து
பல உயிரினங்களை
அழித்தும் விடுகிறாய்.,
பல உயிரினங்கள்
புதுமையாக இருக்க
நீயும் நிலமும்
ஒன்று சேர்கிறீர்கள்.,
காற்றோடு
நீ கொஞ்சம் இணைந்து
இதமான சுகத்தை தருகிறாய்.,
புயலோடு இணைந்து
சோகத்தை அளிக்கிறாய்.,
வெள்ளையில் உறைபனியாக
திடமாய்
எழில் கூட்டுகிறாய்.,
ப
தெய்வம் கண்ணடைத்துக் கொண்ட
கருணைகளற்றக் காலமொன்றில்
காலனின் கைப்பிடித்துக் கொண்டு
காமுகம் அணிந்து
வெளியே வந்திருந்தது அது
மனுஷம் சிதைக்கும்
மிருகத்துவத்தின் பிரதிநிதியாய்..
தோண்டப்படுகின்ற புதைகுழிகளின்
ஆழத்திலிருந்து வெளியே வருகின்ற
எலும்பு கூடுகளை விதைத்துவிட்டு
சர்வதேச மட்டத்தில்
கொல்லப்பட்ட புறாக்களின்
இறகுகளால் பின்னப்பட்ட
சமாதானத்திற்கான பொன்னாடை
போர்த்திக் கொள்கின்ற சுயநலங்களோடு
சிறகுகள் அடித்துக் கொள்கிறது
அதன் பேராசைகளின் பறவை.
கட்டவிழ்த்து விடப்பட்ட
வன்முறைகளின் கூடாரங்களிலிருந்து
இனப் படுகொலைகளுக்கான
குரோதங்களை குடித்து திளைத்த
ஆணவங்கலோடு
மற்றவர்களுக்கு இவர்கள்
கடைசிவரை தெரிவதேயில்லை
இவர்களும் மனிதர்கள் தான் என்று...!!!