பவித்ரன்1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பவித்ரன்1
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-May-2015
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  9

என் படைப்புகள்
பவித்ரன்1 செய்திகள்
பவித்ரன்1 - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 6:11 pm

விழி ஆகாரம்..
காதல் பசியில்
செரிக்கும் கவிதைகள்
----------------------------------------



கடந்துப்போன நிழற்களையெல்லாம்
தின்று செழித்துக்கொண்டிருக்கும்
எனது கவிதைகளை
எண்ண நதிகளில்
நினைவுப்பரிசல்களில் நீந்தவிடுகிறேன்.

இவைகள் செல்லட்டும்...
எங்கேனும் செல்லட்டும்
எந்த ஒரு முதிர்கன்னியின் விழிகளில்
கிறக்கத்துடனோ
இரக்கத்துடனோ
வாசிக்கப்படுமாயின்
எந்தன் எழுத்துக்கள்
அக்கன்னியின் கழுத்தில்
தாலியை கட்டிக்கொள்ளட்டும். அந்த
அங்கீகாரத்தில் என் கவிதை
திருமணப்பரிசும் பெற்று தொலையட்டும்.

இனியெந்த கவிதையிலும்
எந்தன் பெயர் வேண்டாம்.
இனியெந்த கவிதையிலும்
அவளும் கருவாக வேண்டாம்.

மேலும்

//எத்தனைமுறைதான் அவளின் நினைவுவிந்துவினால் இறந்த காதலை கர்ப்பமாக்கிக்கொண்டிருக்க முடியும்? // கவிதையில் மிளிரும் வரிகள். 27-May-2015 2:55 pm
வலிகளா இவை தயவு செய்து தள்ளி வை ... ;) 15-May-2015 4:11 am
வலி வலி வலி காதல் எவ்வளவு சுகமோ அவ்வளவு சுமையும் தான் .. அருமை அண்ணாக்குட்டி . 29-Mar-2015 3:19 pm
உணர வேண்டியவர்கள் ?? நன்றி தோழா :) 29-Mar-2015 3:13 am
பவித்ரன்1 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2015 1:17 pm

நாடகக்கலை
நலிந்து விட்டதாம்
நலியாமல் என்ன செய்யும்
எல்லோரும் அரசியலுக்கு வந்து விட்டால்.......

மேலும்

அருமை அங்கதம் (satire ) வாழ்த்துக்கள் பவித்திரன் அன்புடன்,கவின் சாரலன் 27-May-2015 3:16 pm
ஹா ஹா ஹா ..எவ்ளோ பெரிய தத்துவம் அட அடா ...சூப்பருங்கோ ........... 27-May-2015 2:25 pm
பவித்ரன்1 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2015 1:14 pm

மானே, தேனே
மாதே
எனும் கவிதைகள்
பேனே, ஈரே
எனப் பெருகுவது சரியோ

ஆணில் பெண்ணும்
பெண்ணில் ஆணும்
சரி பாதியாய்
இருப்பதை அறிவீரோ !!!!

மேலும்

பவித்ரன்1 - யாசர் பாசித் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 4:40 pm

ஒரு முறை கூட
ஒரு மலரை
உன்னிடம் தந்து
என் காதலை சொன்னதில்லை
வாடுகின்ற மலரை கண்டு
நீ வாடுவாய் என்பதால்

மேலும்

அருமை !! 26-May-2015 6:56 pm
நல்வரவு எழுத்துத் தளத்துக்கு. முத்தான முதல் கவிதை பதித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! 26-May-2015 4:47 pm
பவித்ரன்1 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2015 2:19 pm

காடு......
மண்ணின் ஆடை
மலையின் கூந்தல்
நதியின் பிறப்பிடம்
மக்களிடமிருந்து தப்பித்த
மாக்களின் மறைவிடம்
நிலமகளின் பச்சைப் பட்டாடை
அருவிக் குழந்தைகள் தவழ்ந்து
நடை பயிலும் மைதானம்
மர மாமுனிகள் ஒற்றை காலில் தவம் இருக்கும்
தவச்சாலை !!!

மேலும்

அருமை. தொடருங்கள். 26-May-2015 5:16 pm
இன்னும் இன்னும் கொஞ்சம். வளர்க கவிதை! 21-May-2015 7:05 pm
காடு இக் கவியின் கருப பொருளும் கூட அழகு 21-May-2015 2:31 pm
நல்ல கவி வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 21-May-2015 2:28 pm
பவித்ரன்1 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2015 11:36 am

பொன் வானம் சிவந்தது
கதிரவன் கரங்கள் தீண்டியே!!!!!

மேலும்

எனக்கும் ஆசை இப்படிகுட்டி கவிதைகளாக ஆரம்பித்து பெரியதாக பிறகு எழுத,. 21-May-2015 7:06 pm
எழில் 21-May-2015 11:55 am
இயற்கையின் நாணம்.... 21-May-2015 11:52 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மேலே