ப க கா மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப க கா மணிகண்டன்
இடம்:  போடிநாயக்கனுர் / திருப்பூ
பிறந்த தேதி :  16-Nov-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Feb-2015
பார்த்தவர்கள்:  339
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கூட்டு குடும்பமாக இருப்பது மிக.....மிக..........பிடிக்கும்.

என் படைப்புகள்
ப க கா மணிகண்டன் செய்திகள்
ப க கா மணிகண்டன் - ஆ புருசோத்தமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2015 12:34 am

காதல் இரு வகை ஒன்று
கற்புள்ள காதல் மற்றொன்று
கற்பில்லா காதல் .
காதலிக்கும் இரு மனம்
எந்த ஒரு பயம் இன்றி
காதலிப்பது கற்புள்ள காதல்.
பயத்துடன் காதலிப்பது
கற்பில்லா காதல்.
கற்புள்ள காதலர் அனைவருக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்.

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ் 14-Feb-2015 5:04 pm
பயம் ... காதலில் ...கவி நன்று ... 14-Feb-2015 1:32 pm
ப க கா மணிகண்டன் - balaji9686 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 6:19 pm

அழகின் பேரழகு இவளே என வியந்தேன் அவளை வனத்தில்
கண்ட போது !
சிலிர்ப்பின் சுகம் இதுவே என சிலிர்தேன் அவள் தென்றலாய்
தீண்டிய போது ,
சீற்றத்தின் கோரம் இதுவே என அறிந்தேன் அவள் அலைகளாக
சீறிய போது ,
தாகத்தின் தவிப்பு அறவே என மறந்தேன் அவள் மழையாக
பொழிந்த போது ,
மோகத்தின் வெட்கம் அதுவே என புன்னகைதேன் அவள் மேகங்கள்
மோதிய போது ,
வெப்பத்தின் தாக்கம் சுகமே என நின்றேன் அவள் கதிர்கள்
தாக்கிய போது,
ஒளியின் வெளிச்சம் அழகே என நினைத்தேன் அவள் வெண்ணிலவாய்
ஒளி வீசிய போது ,
கவிதையின் அர்த்தம் இவளே என்று அவளை எழுதுகிறேன்
இங்கு ,
அவள்தான் நம் மூச்சோடு மூச்சு கலந்து உயிர் மூச

மேலும்

நன்றி நன்றி 12-Feb-2015 10:15 pm
நன்றி 12-Feb-2015 10:15 pm
நன்று தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:17 am
இயற்கை ரசனை சூப்பர்.... வாழ்த்துக்கள்... 09-Feb-2015 12:03 am
ப க கா மணிகண்டன் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2015 2:31 am

தன்னையே வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு
நிழல் கொடுத்து
நிம்மதி அடைந்தது மரம்...

உணவு கிடைத்தும்
உண்ண விரும்பாமல்
வரிசையாக நின்று
ரசித்துக் கொண்டிருந்தது எறும்புகள்
வாசலில் யாரோ போட்ட
அழகான மாவு கோலத்தை...

கன்றுக் குட்டிக்கு
குறைவாக பால் கொடுத்தது
பசியில் அழுத குழந்தையை
பார்த்துக் கொண்டிருந்த பசு...

மழையில் நனைய
வாய்ப்புத் தந்ததற்கு
மனிதர்களிடம் நன்றி சொன்னது குடை...

அழுது முடித்தும்
அதிகமானது கவலை
அநாதையாகிப் போன
கண்ணீர்த் துளிகளைக் கண்ட கண்களுக்கு...

கொசுக்களைக் கொன்ற பாவத்திற்கு
தன்னையே எரித்து
தண்டனை இட்டுக் கொண்டது
கொசுவத்திச் சுருள்...

இறந்தால

மேலும்

மிக்க நன்றி தோழரே.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... தங்கள் ரசனையே ஒரு ரசனைதான் தோழரே... ரசித்தேன்... 02-Mar-2015 4:20 pm
நம்பிக்கையில் எழுகிறது..... இல்லாத ஒரு தூதுவனின் சிறகு..... அது இல்லத ஒன்றை இருப்பதாக மாற்றும் கணங்களை ஒரு கவிதையாக்கிக் கொண்டிருக்கலாம்.... அவன்.... அவனில் இருந்தே துவங்குகிறது.... நாம் என்ற நாட்காட்டி.... அழகு தோழரே.... 01-Mar-2015 8:47 pm
மிக்க நன்றி தோழரே.... தங்கள் வருகைக்கும் புரிதல் கருத்துக்கும் நன்றிகள் பல.... 21-Feb-2015 12:30 pm
உணவு கிடைத்தும் உண்ண விரும்பாமல் வரிசையாக நின்று ரசித்துக் கொண்டிருந்தது எறும்புகள் வாசலில் யாரோ போட்ட அழகான மாவு கோலத்தை... என்னிடம் படித்தவர்களில் யாரோ ஒருவன் இப்போது கவிதை எழுதிக் கொண்டிருக்கலாமென்று ஏதோ ஒரு தமிழாசிரியர் நம்பிக் கொண்டிருக்கலாம்... வரிகள் மிகமிக அருமை படித்தேன் ரசித்தேன் 21-Feb-2015 11:41 am
ப க கா மணிகண்டன் - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2015 1:17 am

4 ஆண்டுகளில் 4,500 உடல்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கடந்த நான்கு ஆண்டுகளில், அடையாளம் தெரியாத, 4,500 உடல்கள் கண்டெக்கப்பட்டதாக, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, வி.பி.எம்.பி., என்ற அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா பலோச், தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், காணாமல் போனோர், கேட்பாரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்கள் ஆகியவை குறித்த விவரங்களை, பாக்., அரசு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜவாத் கவாஜா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து, தலைநகர் ...
மேலும் படிக்க

மேலும்

ப க கா மணிகண்டன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Feb-2015 2:53 pm

சார் என்னுடைய குழந்தைகள் பெயர் கீர்த்தனா மற்றும் விஷ்வா இந்த 2 பெயர்களுக்கும் தமிழ் பொருள் மற்றும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்

வணக்கம், என்னுடைய பெயர் கோபிநாத், எனக்கு 6 மார்ச் 2019 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. சதயம் நட்சத்திரம் என்பதால் கோ என்ற எழுத்தில் பெயரை ஆரம்பிக்க வீரும்புகிறேன். அனால் இரண்டு நாட்களாக நான் என் மனதில் ஆசை பட்ட பெயர் ஏதும் நன்றாக இல்லை.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் எனக்கு பகிரவும். 1 . வட மொழி சொற்கள் வரக்கூடாது. 2 . கோ என்ற எலுதில் மற்றும் தான் வர வேண்டும். 3 . சங்ககால பெயர்களாக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு அல்லது மூன்று எலுதில் முடியும் பெயரக இருக்க வேண்டும்.. ( உதாரணம் தாரகை , காருண்ய, மென்மொழி, யாழினி, அமிழ்தினி, மகிழன்) 4 . வாழ்வில் வெற்றி பெற்றவர்களா இருக்க வேண்டும் ( உதாரணம் . சம்யுத்த,சங்கமித்திரை ) 5 . பெயரை கூப்பிடும் போது இரண்டு உதடுகள் ஓட்ட வேண்டும். 14-Mar-2019 6:06 pm
முபா்ணா என்பதன் விளக்கம் பற்றி கூற முடியுமா நண்பர்களே! 30-May-2017 4:02 pm
கீர்த்தனா ----இசைப் பாடல் கர்நாடக சங்கீதப் பாடல்களை கீர்த்தனை என்று சொல்வார்கள் எடுத்துக் காட்டு : தியாக ராஜ கீர்த்தனை, புரந்ததாசர் கீர்த்தனை விஷ்வா அல்லது விஷ்வம் -----பிரபஞ்சம் எடுத்துக் காட்டு : விஷ்வா மித்திரன் ---முனிவனின் பெயர் அறிந்திருப்பீர்கள் அரிச் சந்திரனை சத்திய சோதனைக்கு உள்ளாக்கியவன் திரிசங்கு எனும் மன்னனுக்காக தன தவ வலிமையால் இன்னொரு சொர்கத்தை உருவாக்கியவன் மேனகையின் மேல் கொண்ட மோகத்தால் சகுந்தலையை ஈன்றவன். அவன் பெயரின் பொருள் பிரபஞ்சத் தோழன் -----அன்புடன், கவின் சாரலன் 12-Feb-2015 6:52 pm
ஏன் இன்னும் பத்ஹு வருஷம் களிச்ஹ்சு கேக்கறது தானே. விளங்கிடும் நாடு 11-Feb-2015 10:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே