எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கார்காலத்தின் அழகு 

வெயில்  காலத்தில் புரியும் 
என் காதல் அழகு 
நானின்றி நீ தேடும் தேடலில் புரியும் 

அன்று தேடியும் 
நிலவிரவுகளில் 
இருளோடு உலவும் 
நினைவுகளில் மட்டும் 
ஏதோ நட்சத்திரமாய் தோன்றும் 
என் ஜென்மம் .................
                                  சஜூ 

மேலும்

காதலி

மழைமீது நனையும் எறும்பைப் போல

மண்மீது உலவும் சறுகைப் போல

கடலோடு கரைசேரும் அலையோசைப் போல

நதியோடு விழிமூடும் மண்குதிரை போல

....... உன் பிரிவோடு தினம் வாழ்கிறேன் காதலி......
- சஜூ

மேலும்

கண்ணம்மாவின் காதலன்....

ஓடிச்செல்லாத ஓடம் வரைந்தேன்
ஓடும் மீனைத் தேடும் உன் விழியை வரைந்தேன்

விழிகள் காணும் வானம் வரைந்தேன்
அதில் காற்றை சுவாசிக்கும் உன் மூக்கை வரைந்தேன்

நாணம் கொள்ளும் முகத்தை வரைந்தேன்
அதில் நண்டை உண்ணும் உன் நாவை வரைந்தேன்

நிழலை தரும் மரங்கள் வரைந்தேன்
அதில் கிளைகள் தொடாத உன் காதிழைகள் வரைந்தேன்

வள்ளிகள் பின்னும் கொடிசெடிகள் வரைந்தேன்
அவள் கண்கள் ரசிக்கும் உன் புள்ளிகள் வரைந்தேன்

துள்ளி தாவும் உன் பாதங்கள் வரைந்தேன்
அதன்மீது பச்சை புல்லை மிச்சம் வரைந்தேன்

மானாகி மானிடனாகாமல்
மெய்யாகி பொய்யாகாமல்
காதல் செய்யும்
கண்ணம்மாவின்
க (...)

மேலும்

கானல்

காாிருள் சூழ்ந்த நாளிகை அது
தேனிலா தேயும் காலம் அது
அகல் விளக்கின் வெளிச்சத்தில்
தளிராடும் தென்றலின் வாசத்தில்
துயில் கொள்ளும் நடுஜாமம் அது
மெய்கள் பொய்கள் மறக்கும் தருணத்தில்
மெய்சிலிர்த்தாற் போல் தோன்றும்
ரவிவர்மன் ஓவியம் அது
எண்ண முடியா கூந்தல் அழகும்
எண்ணம் புரியா மௌனத்தின் அழகும்
இதம் புாியாமல் பரிணமிக்கும் நிமிடம் அது
உருகும் வினாடியில் மென்மையான அவள் முகம் கண்டிட
நினைவுகளின் உன்னத்தில் நிஜங்கள் மறந்திட
மெலிதாய் திறந்த விழிவாசல் உணர்ந்தது கனாவுலகின் கனவு அது


- சஜீ

மேலும்

வள்ளி

வள்ளியின் பெயரில் ஓா் நதி
அவள் எங்கள் ஊா் நதி

அதிகாலைவரை அவள் தனி
அந்தி முடிந்தும் அவள் மீது தாெடரும் பணி

காலையில் அவளை உணர்த்தும் வெண்பனி
கரைகளில் நிறைந்து கொள்ளும் சோப்பின் தாவணி

தாமரை மணக்கும் அவள் மேனி
தவறாமல் அதன் மீது மிதக்கும் தினம் ஓர் துணி

தினம் அவளை தேடுது மனிதன் விழி
தன்னை அழிப்பவனுக்கு உதவவேண்டுமென்மது அவள் விதி

- சஜு

மேலும்

                                        செந்தாமரை மலா்


  செந்தாமரை மலா் போன்ற மென்மையான மனம் கொண்ட என் தாய்க்கு
 கடல் கடந்த நாட்டில் பௌா்ணமி வெளிச்சத்தில்
 நான் எழுதும் கடிதம் 
 மலா்கின்ற பூமியில் தினம் மனம்தேடும் முதல் இடம் நீயே தாயே  
உன் கையால் தினம் இளங்காலையில் கிடைக்கும்
 தேநீரை பருக என் மனமிங்கு ஏங்குகின்றதே தாயே
  என் குறும்புகளின் முடிவில் 
உன் அன்பான கோபங்கள் கண்டிட  விழிகள் தவிக்கின்றதே தாயே  
 தேநிலாவின் வருகையில் நீ ஊட்டும்  
 உன்னுடைய அறுசுவையான உணவினை உண்டிட ஏங்குகின்றன் தாயே 
 தென்றல் குளிரோடு நீ கூறும் கதை கேட்டு
   உன் மடிமீது விழிமூட ஏங்குகின்றேன் தாயே       

மேலும்

அழகு

தன் நிழலை தானே அறியாத
மரம் செடி கொடிகள்- அழகு

அதில் மஞ்சள் வெயிலில் பாடும் கொஞ்சும் குயிலின் ஓசை - அழகு

விட்டுச் சென்ற வீதியை
தொட்டுச் சென்ற தெருக்கள் - அழகு

அதில் தனிமையில் இனிமை காணும்
கடைவீதி விளக்கின் வெளிச்சம் - அழகு

இடைவிடாமல் செல்லும்
நெடுந்தூரத்தின் வீடுகள் - அழகு

அதில் நெஞ்சைக் கிள்ளும்
கொஞ்சும் குழந்தையின் கொஞ்சல் சிரிப்பு - அழகு

கனவாய் கலைக்கப்படாத நம் உணர்வுகள் - அழகு

அதை தலையாய் மதிக்கப்படும் நம் உறவுகள் - அழகு


- சஜீ

மேலும்

முதல் முத்தம்

தமிழ் காற்றின்
வாசல் தாண்டி
என் மறுதாயின்
நேசம் தேடி
வந்தேன் நான்

தூரல் மழையும் கொஞ்சம்
தூண்டில் பறவையின் நெஞ்சம்
தூசி தேடா வானில்
தூதுகள் கொண்டு தேடினேன் நான்

ஆயிரம் முகங்கள்
அறியா ஜனங்கள்
ஆகாயம் இசைக்கும்
அழகான தாளங்கள்

கனவாய் மறையும்
கண்களில் புகைபடங்கள்
கண்டேன் ஒரு நொடியில்
கண்மணியின் கூந்தல்கள்

கள்வனின் வருகையை நாடி
கனவுகள் ஆயிரம் கோடி
கண்டதும் கைகள் கூடி
அழைத்துச் சென்றாள் பாதைகள் தேடி
- சஜு

மேலும்

என்  அன்பு  ஆசிரியரின்  
அன்பு வகுப்பறையிலிருந்து.....

நெஞ்சங்கள்  நினைப்பதில்லை

நேரங்கள்  குறைவதில்லை

எண்ணங்கள் ஓய்வதில்லை

எழுத்துகள்  தேய்வதில்லை

பண்புகள் விட்டொழிவதில்லை

பக்கங்கள்  தீருவதில்லை

வினாக்கள்  விடை வாங்குவதில்லை

விடைகள் வினா கேள்பதில்லை

கனவுகள் மறப்பதில்லை

கலங்கரை விளக்கு  போல சரிவதில்லை

அன்பிற்கு  என்றும் பஞ்சமில்லை
அடித்தாலும்  வலிப்பதில்லை   


                    -   சஜீ

மேலும்

              
செல்பி

ஒற்றை  விரலில்
மறந்தோம்  உலகை
சற்றே  நொடியி்ல்
நிறைத்தோம்  நம் நிழலை

வேடிக்கை  வண்ணத்தில்
ரசித்தோம்  அழகை
நாளிகை  எண்ணத்தில்
மாய்த்தோம்  நம்  உயிரை

வேகத்தின்  உன்னத்தில்
வளர்த்தோம்  அறிவை
ஞாலத்தின்  பாா்வையில்
எடுத்தோம்  நம் புகைப்படத்தை
                     -  சஜு

மேலும்

மேலும்...

மேலே