பிரியம் நிறைந்த அத்தனை பேருக்கும் பிரியனின் வணக்கங்கள்.. பாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும்.. ஒரு மிகப் பெரிய காரியத்தை எனக்குள் வைத்து.. இத்தனைக் காலம் பயணித்திருந்தேன்.. இந்நோக்கத்தை.. மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின.. இப்போது.. அது கைக்கூடிய.. அதை சாத்தியப்படுத்திய.. பெரும் தருணத்தின் மகிழ்வில் நிற்கிறேன்.. பகிர்கிறேன்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களில் எழுபது பேருக்கு காத்திருக்கிறது.. ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்.. வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற.. உங்கள் ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்.. ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் வசப்பட்ட படைப்புச் சூட்சுமம். ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. மேலும் இது தனிப்பட்ட முறையில் அல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு நிகழ்ந்தால்.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. பாடலாசிரியர் பிரியன் ஆகிய அடியேனது முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றின் திரைப்படக்கல்லூரிப் பிரிவில்.. வரும் ஜீலையில் இருந்து துவங்கப்பட இருக்கிறது.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing). உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம். இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். அனைத்தும் வசம். மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் நிறைத்து.. அனைத்தும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த வாழ்த்துகள்.. ஜீலை 2013 – 2014-ஆம் ஆண்டிற்கான, திரைப்பாடல் இயற்றுநர் - தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விருப்பம் கொண்டவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல், பத்திரிக்கைப் படைப்பு என, முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பித் தகவலறிந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும். மேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண்கள் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்.. வகுப்பு : திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்) குறைந்தபட்சக் கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு ( any group) சிறப்புத் தகுதி - தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம். மேலும் விவரங்களுக்கு.. பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) - 8056161139, மின்னஞ்சல் - diplyric.piriyan@gmail.com
வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வைகள் : 1767
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]