அன்புடன் மலிக்கா- கருத்துகள்

அன்பின் சொந்தங்கள் நட்புகளாய் தட்டிகொடுக்கும் வார்தைகளோடும் வாஞ்சைகளோடும் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தந்ததே பெருமிதம். இறைவனுக்கே புகழனைத்தும்.. நெஞ்சார்ந்த நன்றிகளுடன் என்றும் உங்கள் அன்புடன் மலிக்கா..

புரட்சி செய் புரட்சி செய்
பூக்களும்
போர் தொடுக்கும்
பூத்தொடுக்கும்
பெண் விரல்களும்
போர்த்தொடுக்குமென்பதை
உணர்த்துவதுபோல்
புரட்சி செய்..

உணர்வுகளுக்கு
உரமிடும் வரிகள்
பரிசு பெற்றமைக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழியே!

கவிதை அருமை வாழ்த்துகள் தோழமையே..

பாரதியின் ப்ரியத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தங்களின் அன்பான கருதுகளுக்கு மிக்க நன்றி..தோழமையே!

நெஞ்சார வாழ்த்திய நெஞ்சத்துக்கு எனது அன்பான நன்றிகள்..

மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ஜிப்ரி.

கனவுளை சிதைப்பதென்பது
உங்களுக்கு சாதாரணம்
எனக்கது சதா ரணம்
சுருக்கமாய் சொல்வதென்றால்
நீங்கள் சந்தர்ப்ப வாதிகள்
சந்தேக சாதிகள்
அடுத்தவரை அழவைத்தே பழகிய
பரம்பரையில் வழித்தோன்றல்களாகவே
இன்னமும் வாழ்கிறீர்கள்
//

மிக அருமையான
கவிதையிது
அல்ல அல்ல உணர்வுகளின்
உணர்வுயிது..

இப்போது நான் உணர்வுகளால்
தயார் செய்து கொண்டிருக்கிறேன்
இன்னொரு உணர்வின் வலியை
வேறொரு உணர்விலிருந்து.

//ஒத்து வராத அணுகுதல்களோடு
ஊறி உமிழ்ந்து போக
உமியல்ல நான்
சாதனைகளின் சாசனம் எனது.
நெருக்குதல்களோ,அடக்குதல்களோ
நெருங்குகிற பொது
அனுமதிக்கவோ,அங்கீகரிக்கவோ
விருப்பம் வில்லை துளியும்//

மிக அருமையான சொல்லாடல்கள் தோழமையே..பாராட்டுகள்..

ம்ம்ம் வேற வழி. இருக்கு இருந்தாலும் இதனைவிட்டு அதனைத்தேடியே ,,

தங்களின் கவி வரிகள் எனக்கு மிகவும் பிடித்தன தோழமையே.

பிரிவின் வலி கொடியது,
அதை உணரும் தருணம்
அதைவிடக் கொடியது.

காசின் பிடியில் மனிதன்
மனசின் பிடியின் காதல்
இரண்டுக்குமிடையில்
போராட்டமென்னவோ
இரண்டுக்குமேதான்.
என்ன செய்ய
இயந்திர உலகில்
இயந்திரமாய் நாம்..

மிக்க நன்றி தோழமையே..

அன்பின் அன்பானவர்களின் அன்பான கருத்துகளுக்கு அன்புகலந்த நன்றிகள் பல.

வாழ்த்திய உள்ளதிற்க்கு வாசம் நிறைந்த நன்றிகள்..

தாய்மையுள்ளமும் தந்தையுள்ளத்தின்
தாலாட்டுகளின் தார்மீக வெளிப்பாடுதான்
தளிர்களின் வருகை.
அதற்கான கவிதையெழுதுவதென்பது எழுதிக்கொண்டேயிருக்கலாம்..

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்..

தோழமையே! தங்களின் வரிகள் மிக ஆழமாக சிந்திக்கவைக்கிறது.

மனிதத்தவறுகள் மண்ணில் புதிதல்ல
மறுபடியும் தவறாதவைகள் மன்னிக்கப்படவேண்டிவைகள்.

கவிதைக்கு பாராட்டுகள்.

சின்ன சந்தேகம்
[”குரங்கிலிருந்து வந்தவர்கள் தானே நாம்”
பின்பு நம் குணம் மட்டும் எப்படி வேறாகும்}
இது உண்மையா?

இது என்கருத்து:
மனிதர்கள் மாபெரும் குற்றங்கள் புரிந்ததால்
அதை பிற மனிதர்களுக்கு உணர்த்துவதற்காக.
அதைக்கண்டு பிறமனிதர்கள் உணர்வதற்காக தான்
குற்றம்புரிந்த மனிதர்களை குரங்குகளாக மாற்றினான் இறைவன் என படித்துள்ளேன்..

என் மனதின் தவிப்பு மட்டுமல்ல பலர்மனங்களின் நிலை இதுதான்.
உண்மை அருகிலிருக்கும்
பொய்யை நோக்கியே பயணப்படும்.
நிஜம் நேரெதிரே இருக்கும்
நிழலைத்தேடியே நித்தம் அலையும்
இது எதார்த்தம்.

கேள்விகளே கேட்டுக்கொண்டிருந்தால் விடைகள் கிடைக்காது
சிலநேரத்தில் கேள்விகள் கேட்காவிட்டால் வாழ்க்கை சிறக்காது..


நம்பிக்கைதான் உலகம்
நம்பிக்கைதான் வாழ்க்கை
ஆகவே
நம்பிக்கையில்லாமல் எதுவுமில்லை
நம்பினோர் கைவிடப்படுவதுமில்லை..

தோழமையே தங்களின் அருமையான கருத்துரைகளுக்கு அன்பான நன்றிகள்.

ரதி தங்களின்
அழகிய பின்னூட்டதிற்க்கு
அன்பார்ந்த நன்றி...

தோழமையே! என் எழுத்துக்கள் தங்களையும் எழுத்தூண்டுவதில் மிகவும் சந்தோஷமடைகிறேன். இந்த எழுத்துக்களால் நான் நிறைய உள்ளங்களில் இடம்பிடிதிருக்கிறேன். எழுத்துகளில் உணர்வு இருக்குமானால் எல்லாமனங்களிலும் புகுந்துக்கொள்ளும் என்பார்கள். எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நயம்பட பொருள்பட ஒன்றுவிடாமல் எழுதுங்கள்..


நான் குருவல்ல என்றுமே நான் சிஷ்யன்தான் இறைவனுக்கும் எனது எழுத்துக்களுக்கும்..

தங்களின் அன்புக்கு எந்நாளும் எனது நன்றிகள்..

மிகுந்த சந்தோஷம் தோழமையே தங்களின் அன்பான கருதுகளுக்கு மிக்க நன்றி..

சிறகுகளை விரிக்க கற்றுத்தரும் கருத்துகளுக்கு அன்பு நன்றிகள் தோழமையே!


அன்புடன் மலிக்கா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே