கிரிகாசன்- கருத்துகள்
கிரிகாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [29]
- hanisfathima [20]
இருவருக்கும் நன்றிகள்
நன்றிகள் நிலாசூரியன் அவர்களுக்கு என்கவிதைகள் மேலும் குயிலின் ஓசை எனும் பக்கத்தில் உண்டு தேடி பாவிக்கவும்
நன்றிகள் கோடி!
நன்றிகள்! இது இலேசானதாகவே எழுதினேன். தலைப்புக்கு ஏற்றதல்ல .பின்னர் தலைப்பை கொடுக்கும்போது திசை மாறிவிட்டதோ? எதிர்பார்ப்பு உள்ளே இல்லையோ? தவறுதான்
வாழ்த்தியவர்களுக்கும் கவிதையை பரிசில் வழங்கிக் கௌரவித்த எழுத்து.காம் கவிதைதளத்திற்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்
அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நான் நன்றி சொல்வதில்லை என்ற ]ஆதங்கம் எவர்க்கும் வேண்டாம். எனது உடல்நிலை சற்று மோசமானது. கூடிய நேரங்களில் எழுதும் ஆற்றலை இழந்திருப்பேன். அதனால் எவருக்கும் பதிலளிப்பதில்லை .ஆனால் மனம் நிறைய நன்றிகள் தேக்கி வைத்திருக்கிறென். அனைவருக்கும் நன்றிகள்!!!!
மிக்க நன்றிகள் அன்பரே !
நன்றிகள் உரித்தாகட்டும்!
கிரிகாசன்
மன்னிக்கவும் இது போட்டிக்கான கவிதை அல்ல/ எழுத்து.காம் க்கு வாழ்த்து பா! எல்லோரும் கருத்து கூறினார்கள். நான் கவிதையில் கூறினேன். நான் எதை எழுதினாலும் ஈழ ம் பற்றி என்னை யறியாமலேயே வரிகள் வந்துவிடுகின்|றன.
போட்டிக்கு முதலே கவிதை ஒன்று எழுதினேன். நீக்கிவிடுவீர்களோ தெரியவில்லை . விதிமுறைக்கு கட்டுப்படுகிறேன்!
அன்புடன் கிரிகாசன்
வண்ணங்கள் தீப்பொறி கொள்ளின்- அங்கு
வாணம் வெடித்திடக் காண்போம்
எண்ணங்கள் தீப்பொறி கொள்ளின் அங்கு
எங்கள் எழுத்து கொம் காண்போம்
மண்ணெங்கள் கையில் கிடைத்தால் அங்கு
மாபெரும் வாழ்வின் சுபிட்சம்
உண்ணுங்கள் பொங்க அமுதாம் விட
உன்னத தேனெனும் பாக்கள்
ஏடெடுத்துப் பிள்ளை கற்கும் அது
இன்தமிழ் ’அ’சொல்லிக் கீறும்
நாடெடுத்து மன்னன் வெட்டி எந்
நாளும் உயிர்கொல்லக் காணும்
வீடெடுத்து துயில் கொள்ளும் - இந்த
வேலை விட்டே வீரமென்றே
பாதொடு பாக்கள் புனைந்து எங்கும்
பாடு சு தந்திரம் என்றே!
உலவும் நிலவே ஓடிச்சொல் (பொங்கல் போட்டிக் கவிதை)
நேற்றிருந்தாய் இன்றில்லையே வெண்ணிலாவே - அந்த
நீலவிண்ணின் ஓரத்திலே வெண்ணிலாவே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்தே யார் மறைத்தது கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதல்மனம் கனிய வைப்பாய் வந்திடுநாளை
சாற்றுவதை யாரிடத்தில் சொல்லிடுவேனோ - இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயோ
வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ
ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும் நிலாவே
சீற்றம்கொள்ளினும் ஈற்றில் ஒன்றிடு கொள்கைவிடாதே - நீ
சேர்ந்து நின்றிடு தீமைவென்றிடு விடிந்திடும்நாளே!
-கிரிகாசன்
தங்கள் மூவருக்கும் மிக்க நன்றிகள்.
அனைவருக்கும் மன மகிழ்வுடன் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன்
கிரிகாசன்
நன்றிகள் கோடி!
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் .
தங்கள் வாழ்த்துக்கள் (மற்றையவர்களது வாழ்த்துக்கள் போலவே )என் கவிப் பயணத்தில் உயரச் செல்ல ஒரு படிக்கல்லாக அமைகிறது என்பதில் ஐயமில்லை
மீண்டும் தாமதமான பதில் மன்னிப்பு கோரல்
பிறந்தநாள் வாழ்த்து வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும் (தனித்தனியாக கூற முடியவில்லை.மன்னிக்கவும்) என் மனமார்ந்த நன்றிகள்!
நன்றிகள் ஐயா !
நலமே உள்ளேன்! அகன் அவர்களுக்கு தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். அன்புடன் காணவும்
மற்றைய வாழ்த்து தெரிவித்தவர்களுகும்நன்றிகள்! உடல் நலக்குறைவாக இருந்தேன் பனியும் குளிரும் வாட்டி வதைத்துவிட்டது. இப்போது பரவாயில்லை
தங்கள் அன்புக்கு நன்றிகள்! பாராட்டுக்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அவை எனக்கு சொந்தமானதல்ல. எனை ஆளும் சக்தி யின் பெருமைகள் அவை. அவளையே சாரும். நான் சாதாரணமானவன். திடீர் கவிஞன். அவள் காதில் சொல்வதை எழுத்தில்வடிக்கும்
இயந்திரம் நான், அவள் பெருமையைக் கூறும் சில கவிகள் தொடர்கின்றன,
மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு.
அன்புடன் கிரிகாசன்
நன்றிகள்! எங்கே இந்தக் கவிதையை ஒதுக்கிவைத்து விடுவீர்களே என்ற அச்சம் இருந்தது . இதுபோன்ற கவிதையை சிலர் ரசிக்க முடியாமல் திணறி குப்பை என்றபோதுதான் எழுந்த கவி இரண்டு
அடுத்தடுத்து போடுகிறேன்
ஈஸ்வர் தனிக்காட்டிராஜா அவர்களுக்கும் நன்றிகள்!