ரேவதிமணி- கருத்துகள்

நட்களிட

நாட்களிடம் பிழையை சரி செய்தால் நன்றாக புரியும்.

பூச்சூடி நின்ற போது,
புத்தாடை கேட்ட மகள்,
புது வாழ்க்கை தொடங்க
புருஷன் வேண்டுமென கேட்கலையே..??
அருமை!

நட்பென்ற நதியினிலே இரண்டு மீன்கள்......!

காதல் என்ற கடலை காண போகின்றன!

நன்னீரில் வாழ்ந்த மீன்கள் பாவம்

நதி சேரும் இடம் அறியாமல்

கடல் நீரை கண்டவுடன்

கண்கலங்க போகின்றன.

படித்ததில் பிடித்தது.

என் நண்பர் ஒருவர் கூறினார் நல்ல நண்பர்கள் பிரிய முடியாத சூழ்நிலை வரும்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று.
எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. நட்பு என்றால் என்ன? அதுவும் ஒரு வகை உறவு தானே, அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, இவர்களை போல் நட்பும் ஒரு ரத்த சொந்தம் இல்லாத உறவு. அப்படி ஒரு தூய்மையான உறவை திருமணத்தில் முடிப்பது சரியா? இது ஒரு வகையில் நட்பென்ற உறவுக்கு களங்கம் விளைவிப்பது போல் தானே அமையும். நாம் பெரியோர்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருங்கி பழக மறுக்கிறார்கள், காரணம் ஆணும் பெண்ணும் பழகினால் அது திருமணத்தில் தான் முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு, நான் கூறுகிறேன் ஒரு ஆணும், பெண்ணும் நல்ல நண்பர்களாக கூட பழகலாம் என்று ஆனால் இதை விடுத்து நண்பர்கள் என்று பழகிவிட்டு திருமணம் செய்து கொண்டால், அடுத்து வரும் நல்ல நட்பையும் அல்லவா நம் சமுகம் எதிர்க்கும். எனவே என் தாழ்மையான வேண்டும் கொள் நல்ல நட்பு கடைசி வரை நட்பாகத் தான் இருக்க வேண்டும்.

நண்பர் Saranyasatish87, குமரிப்பையன் இருவரும் ஒரு நல்ல கருத்தை கூறி இருக்குறீர்கள். நட்பு காதல் இரண்டில் ஒன்றி இழக்க வேண்டும் அருமை.

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

தோழர் Santhosh Kumar அவர்கள் பதிலுக்கு நன்றி, அனைவரின் கருத்தையும் பார்த்த பின்பு, என் தனிப்பட்ட கருத்தை கூறுகிறேன்.

நன்றி Anusaran நண்பர்கள் தின வாழ்ந்துக்கள்

தொப்புள் கொடி அறுக்கவும், என்று ஆரம்பிக்கும் இடத்தில் அனைத்தும் மிக பொருத்தமாக உள்ளன ஆனால் தொப்புள் கொடி அறுப்பது என்றது மட்டும் பொருந்த வில்லை. நீங்கள் சொல்லும் அனைத்து தீண்டத்தகாத விஷயங்களும் நம் முன்னோர்கள் காலத்தோடு முடிந்து விட்டாலும் காதல் திருமணம் என்று வரும் போது மட்டும் தீண்டாமை இன்னும் நம் நாட்டை விட்டு அகலவில்லை என்று புரிகிறது.
உங்கள் கவிதை அருமை.

கொஞ்சம் கஷ்டப்பட்டால் தான் அதற்கு பின் வரும் இஷ்டம் இனிமையாக இருக்கும். உங்கள் கவிதை அருமை

நன்றி
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
நன்றி

கவிதை மிகவும் அழகாக உள்ளது. mano red அவர்களே என் வழி நடத்தல் என்று தயவு செய்து கூற வேண்டாம். மற்றவர் கவிதைக்கு கருத்து கூற ஒரு தகுதி வேண்டும் உங்கள் கவிதைக்கு கருத்து கூறியவர் திரு. ராஜ் குமார் ஐயா அவர்கள். ஐயா கூறியதற்கு மதிப்பு கொடுத்து செய்த மாற்றங்களுக்கு நன்றி. இனி ஐயா அவர்களின் பெயரில் அவர் கவிதை என் கணக்கிலிருந்து வரும் பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.

உங்கள் கவிதையில் எழுத்து பிழை எதுவும் இல்லை, கவிதை அருமையாக உள்ளது. ஆனால் சிறு சிறு தவறு உள்ளது. என் தந்தை என்று கூறும் மதிப்பு மிகு ஒரு எழுத்தாளர் கூறினார், அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. எத்தனை தவமிருந்து நாம் பிறந்தோம் என்று கூறி இருக்கிறீர்கள். நாமே தவமிருந்து பிறக்க முடியாது. நமக்காக நம் அன்னை தவமிருக்கலாம்.
2. (எதற்கு இனி நாம் விடை பெறுவோம்..!!) இந்த வரிக்கு பதில் வேறு பொருத்தமான வரி இருந்தால் அருமையாக இருக்கும்.
3. (எச்சில் சோற்றை கூட தர மறுக்கும்
கர்ணன் வாழ்ந்த இப்பூமியில்,) இந்த வரியின் பொருள் எப்படி உள்ளது என்றால், எச்சில் சோற்றை கர்ணன் தர மறுக்கிறார் என்று கூறுவது போல் உள்ளது. கர்ணன் வாழ்ந்த இப்பூமியில் எச்சில் சோற்றை கூட தர மறுக்கும் என்று வரியை மாற்றி போட்டிருந்தால் மிகவும் அருமையாக அமைந்திருக்கும்.


அவருக்கும் மிகவும் பிடித்த வரிகள்:
ஒருவேளை ஆறறிவு இல்லாமல் இருந்தால்,
ஒருவேளை கஞ்சியாவது குடிக்கலாம்,
ஆறறிவு கொண்டதால் என்னவோ
வெக்கம் மானம் எல்லாம் புத்திக்கும் தெரிகிறது..!!

பசிக்காக குற்றவாளியாக்கினான்
கூத்தாடும் அந்த இறைவன்..!!
நாக்கை பிடுங்குமாறு நாங்கள்
கேள்வி கேட்கும் போது
அவன் நெற்றிக்கண் திறந்தால் சொல்வோம்
எங்களை படைத்தது தான் முதல் குற்றம்...!!!

otteri selvakumar நட்பிலே ஆண் நட்பு, பெண் நட்பு என்று பேதம் இல்லை. ஆனால் பெண் தோழிகளிடம் கூட நட்பை தொடர முடிவதில்லையே! நீங்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வில்லை என்றால் ஒரு சம்பவம் சொல்கிறேன், என் தோழி ஒருத்தியின் திருமணத்துக்கு பிறகு அவளுக்கு நான் போன் செய்யும் போது அவள் கணவர் (loudspeaker) ஒலிப்பெருக்கி வைத்து தான் பேச சொல்லிகிறார், பெண் தோழி என்று தெரிந்தும் இப்படி செய்கிறார்கள். இப்படி இருக்கும் சில ஆண்கள் காரணமா? இல்லை சமுகம் காரணமா? உங்களை புண்படுத்த இப்படி கூற வில்லை இப்படியும் சில ஆண்கள் இருப்பதால் தான் பெண்களுக்கு இந்த நிலை.

எல்லோரும் கூறும் ஒரே காரணம் சமூகம் தான். என்னை பொறுத்த வரையில் ஒரு கணவன் தன மனைவி மேல் முழு நம்பிக்கை வைத்தால் இந்த நிலை ஏற்படாது. நான் கூறுவது ஆண்களுடன் கொண்ட நட்பை மட்டும் அல்ல, பெண்களுடன் கொண்ட நட்பையும் தான்.


ரேவதிமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே