கீத்ஸ்- கருத்துகள்

நாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது வெகு குறைவே. பெரும்பாலானோர் அனைவரையும் ஒரே மாதரி தான் அணுகுகிறார்கள். நாகரிகம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இதை செய்யமாட்டார்கள்.

நாகரிகம் என்பது ஒருவர் பார்க்கும் கண்களில் உள்ளது. தோன்றும் எண்ணங்களில் உள்ளது. ஏன் நாகரிகம் என்பது பெண்கள் சார்ந்ததா? அது மனிதனை சார்ந்தது. இந்த கால ஆண்கள் கூடத்தான் கமல் அணிகிறார்கள், அரைகுறை ஆடை அணிகிறார்கள், உள்ளாடை தெரியும் படி ஜீன்ஸ் போட்டால் தான் பேஷன் ஆம்? அன்றெல்லாம் பெண்கள் முன் ஆண்கள் மேலாடை இல்லாமல் வர தயங்குவார்கள் அனால் இன்று...

உங்களுது காணொளியை ஏன் நீங்கள் எழுத்து வலைத்தளத்தில் பதிவிட கூடாது? எழுத்து தோழர்கள் அனைவரும் பார்க்க நேரிடும் அல்லவா.

எனக்கு பிடித்த மாதம் செப்டம்பர், புரட்டாசி மாதம் தான். ஏனென்றால் ஏன் பிறந்தநாள்! மேலும் நிறைய பண்டிகை விடுமுறைகளுடன் வரும் ஒரே மாதமும் இதுதான். ;-P

நிச்சயம் நீட்டிக்கப்படும்

மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும்.

பிரபல கவிஞர் பட்டியல் எழுத்து அட்மினால் சேர்க்கக்கூடியது.

அன்புத் தோழருக்கு வணக்கம்,

எழுத்து பக்கத்தில் கவிதை, கதை நீங்கள் எழுதும் பொது தவறுதலாக முந்தய பக்கத்திற்கு சென்றால், இந்த பக்கத்தில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டுமா என்று கேட்கும் வசதி இருந்தது. தற்போது அது செயல் படவில்லை. பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி. விரைவில் சரி செய்யப்படும்.

இது போன்ற பரிந்துரைகள் அனைத்தையும் தற்போது எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். எழுத்து வலைத்தளத்தில் அதற்குரிய பக்கத்தை கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எழுத்தின் அணைத்து பக்கமும் cache செய்யப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்தால், சிறுது நேரம் கழித்து பாருங்கள். உடனே பார்க்க வேண்டும் என்றால், உங்கள் கவிதை முகவரியில் (URL இல்) ஸ்ட்ரிங் பாஸ் செய்து செய்து பார்க்கவும். உதாரணம், இந்த கேள்வி முகவரி eluthu..../view-faq/4297/ - இதை தாங்கள் திருத்தியபிறகு பார்ப்பதற்கு எழுத்து.../view-faq/4297/?123 என்று பார்க்கவும். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது வேவ்வேறு எங்கள் பயன்படுத்தவும்.

சரி, தவறு என்ற இரண்டிற்குள் அடங்கிவிடாது இந்த விடயம். ஒழுக்கமான ஆடை, ஒழுக்கமற்ற ஆடை? அப்படி ஏதாவது இருக்கின்றதா. அப்படி பார்த்தால் ஆண்களுக்கும் இது பொருந்தும். பெண்கள் முன்பு மேல் அங்கி இல்லாமல் இருப்பது, தொடைதெரியும் படி வேஷ்டி அணிவது, இதுவும் ஒழிங்கீனம் தானே? ஆணின் ஒழுக்கமற்ற பார்வை, ஒழுக்கமற்ற சிந்தனை என்று சொல்லலாமா???

மிக மிக அருமை தோழரே

மீண்டும் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி அய்யா.
என்னக்கு பழைய சோறும், வெங்காயம், மற்றும் மோர் மிளகாய், வத்தல் இருந்தால் போதும். ஒரு கை பார்ப்பேன்.

சரியாக சொன்னீர்கள் தோழரே. இவர் மெட்டுக்கள் அமைத்திருக்கலாம், நல்ல பாடகர் பாடினால் தான் பாடல் கேட்கும் படி இருக்கும், நல்ல கவிஞர் எழுதி இருந்தால் மட்டுமே பாட்டு சிறக்கும், திறமைசாலிகள் இல்லை என்றால் மெட்டுக்கள் தப்புகள் ஆகி இருக்கும். இவருக்கு ஏன் இந்த தலைக்கனம்.

எழுத்து எப்பொழுதும் போல தான் செயல் படுகின்றது. போட்டிகள் நடத்தப்படுவதில்லை. தொழில்நுட்ப வேலைப்பாடுகளில் கவனம் செலுத்துவதால் போட்டி நடத்த முடிவதில்லை. தோழர்களின் ஆர்வம் தான் குறைந்து காணப்படுகின்றது. கவிதைகள், எண்ணம் ஆகியவற்றின் எண்ணிக்கைகள் குறைவாகவே உள்ளது. வேண்டிய வசதிகள் அனைத்தும் எழுத்தில் உள்ளது. இன்னும் மெருகேற்ற என்ன வேண்டும் என்பதை நாங்கள் தொழில் நுட்ப ரீதியாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுடைய கருத்துகளையும் பதிவிடுங்கள்.

ஜி எங்களுக்கு தங்கமே வேண்டாம். இப்போது உள்ள காலத்தில் எந்த பெண்ணும் தங்கம் விரும்புவதும் கூட இல்லை. விலைவாசி அப்படி. கவரின் நகைகள் தான் எல்லாம்.

"கல்யாணம் பண்ணும் பொழுது ஆண்வீட்டார் கேட்டார்கள், பொண்ணுங்கு ஒரு மூன்று பவுனுக்கு நெக்க்லாஸ், ஐந்து பவுனுக்கு ஆறாம், 2 டே பவுனுக்கு வளையல், ஒரு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 2 பித்தளை குத்து விளக்கு, ஒரு குடம், ஒரு வாஷிங் மெஷின், ஒரே ஒரு பிரிட்ஜ், உங்களுக்கு ஒரே ஒரு பீரோவ், பத்தே பத்து பட்டு புடவை , முடிஞ்சா மகனுக்கு ஒரு புல்லட், எல்லாம் உங்க மகளுக்கு தான் வெளிய விசேஷங்களுக்கு போகும்போது மத்தவங்க பாத்து மதிகோணும்ல... "

அம்மா வீட்ல கவரின் நகை போட்ட எங்களுக்கு மாமியார் வீட்டில் போடா தெரியாதா? கல்யாணம் ஆனா இதெல்லாம் கண்டிப்பா குடுக்கணுமா? அப்பா மாப்பிள்ளை வீட்ல ஒண்ணுமே இருக்காதா? கல்யாணம் பண்றதே இதுக்குதான் போல ;P

வரதட்சணை என்ற பெயரில் சீர் செய்ய சொல்கின்றனர் மணமகன் வீட்டார். தீபாவளிக்கு தங்கம், பொங்கலுக்கு வெள்ளி, ஆடிக்கு பட்டு. இருக்கிறதை கொண்டு செய்தால். உன் விட்டார் இவ்வளவு தான் கொண்டு வந்தனரா என்று ஏளனம் செய்கின்றனர். என்ன செய்ய காலக் கொடுமை.


கீத்ஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே