லக்ஷ்மனமுர்த்தி- கருத்துகள்

ஒரு இடத்தை / பொருளை பயன்படுத்தும் பொழுது / பயன் படுத்திய பின் அந்த பொருள் / இடம் நாம் பயன்படுத்தும் முன்னர் எப்படி இருந்ததோ (சுத்தமாக) அவாறு அந்த இடத்தை சுத்தமாக (அடுத்தவர் பயன்பாடிர்க்காக) இருக்கும் படி பார்த்துகொள்வது ஒவொருவரின் கடமை என்பதை ஒவொருவரும் உணர்ந்து செயல்படும்பொழு துதான் இந்த நிலை மாறு என நினைக்கிறன் . பொதுவாக கழிவறையை சுத்தம் செய்வதை பெரும்பாலான மக்கள் கேவலமாக கருதுகிறார்கள். இல்லையா ? .. ஒவொருவரும் கழிவறையை பயன்படுத்திய உடன் ஒரு வேலையாள் அந்த கழிவறையை சுத்தம் செய்யும் அளவுக்கு பணியாட்களை நியமித்து அரசே சுத்தம் செய்ய இயலும் என்று கருதுவது சரியா ? நாம் பயன்படுதுமிடம் நமக்குரியது... அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லையா ? கழிவறையை சுத்தம் செய்வது கேவலமான வேலை என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.....தனி நபர்களின் எண்ணங்களை மாற்றுவது இயலாத கரியம் !...எனினும் ............ ".சுத்தம் சுகம் தரும்"...... என்ற வாசகங்களை பிரகடன படுத்தலாம்......நன்றி.....

இது என்ன காதலின் வெளிப்பாடா ? அது எதுவாக இருந்தாலும் மனம் தளராமல் வாழ்கையில் வெற்றி அடைவதே முக்கியம் வாழ்கையில் சாதிப்பதே மனித வாழ்வின் லட்சியம் மறந்துவிடாதீர்... ....நன்றி...

அன்பின் அடையாளம்........அன்பின் வெழிப்பாடு .......அன்பான மக்களின் வாழ்வுக்கு ஆதாரம்.... மனதை தொடும் கவிதைக்கு நன்றி .....

காதல் என்ற நினைவை உருவாக்கியது உங்கள் உள்ளம்...ஒரு மனிதருக்குள் காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்பார்கள் அதன் வெற்றி தோல்வி என்பது விதிப்படியே நடக்கலாம் ........ எனினும்.......உங்கள் வாழ்கையில் நீங்கள் வாழ்ந்து ஜெயித்துக் காட்டுங்கள்......அது தான் உண்மையான வெற்றி....நன்றி....

சிகபைவிட கருப்புதான் சூரியனில் இருந்து அதிகமாக சக்தியை கிரகித்து கொள்கிறது. சிகப்பு மனிதர்களைவிட கருப்பு மக்கள் தான் நோயின்றி திடகர்தமாக வாழ்கிறார்கள். அவதார புருசர்கள் ராமர் மற்றும் பகவான் கிருஷ்ணர் கருப்பகதான் வழ்ந்திருகிரார்கள் .......எனவே விதி படி அமைந்திருக்கும் கருப்பு நிறத்தை கொண்டே மகிழ்வோடு வாழலாம்....சிகப்பில் கவர்ச்சி இருக்கும் . ஆனால் கருப்பில் தான் அதிக சக்தி இருக்கும்....கவிதைக்கு வணக்கங்கள்......கயல் விழி அவர்களின் கவிதை திறம் மேலும் வளர்ந்து மேம்பட வாழ்த்துக்கள்.........

அவர் நாட்டிற்காக செய்திருக்கும் தியாகங்களை அரசாங்கமும் அனைவரும் மறந்துவிட்ட நேரத்தில் நீங்கள் மக்களுக்கு கவிதை மூலம் நினைஊட்டியமைக்கு நன்றி...அக்கால போராடிய மக்களையும் தொழிலாளர்களையும் ராணுவத்தை கொண்டு காட்டுமிராண்டிதனமாக அடக்கிய யாஸ் துறை என்ற கலக்டரை மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து வனுலகுக்கு அனுப்பிய வணக்கத்துக்குரிய வாஞ்சிநாதனுக்கு உதவி செய்ததால்தான் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதாக கூறபடுகிறது....எனவே வா.உ.சிக்கு அரசாங்கம் இன்னும் சற்று அதிகமாக மரியாதை கொடுக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது......தனது அணைத்து சொத்துகளையும் வாழ்கையையும் நாட்டின் சுதந்திரம் பெறுவதற்காக அர்ப்பணம் செய்திருக்கும் அந்த மாவீரருக்கு நாம் இன்னும் அதிக மரியாதை செலுத்தலாம்... நன்றி.......

தமிழ் பிரியரே கவிதைகள் மூலம் தமிழுக்கு பெருமை சேர்பதாக தெரிகிறது. சமுதாயம் மேன்மையடைய உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்...

சீமைகருவேல் தாவரம் அமெரிக்க உட்பட பலநாடுகளிலும் கேரளா மாநிலத்திலும் ஒரு தடைசெய்யப்பட்ட தாவரம்....நிலத்தடி நீரையும், காற்றுமண்டலத்தில் உள்ளநீரையும் உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மையுடையது ....இந்த தாவரங்களின் இல்லை மற்றும் காய்களை உண்ணும் கால்நடை மிருகங்கள் மலட்டு தன்மையாகிவ்டுகிரதாம்..இது சலிப்பு வளர்வதற்கு தீமைதரும் தாவரம் .... தமிழ் நாட்டில் போர்கால அடிபடையில் வேகமாக வேருடன் விதையுடன் அகற்ற படவேண்டிய தாவரம்... இந்த முயற்சிக்கு அனைதுமகளும் அரசாங்கமும் உதவி செய்தால் நல்லது...நன்றி ...

பிள்ளைகளை நேர்மையான்வனகவும் , திறமையனவனகவும், கடவுள் நம்பிக்கையுடனும், எந்த துயரம் வந்தாலும் எதிர் கொள்ளும் மனோசச்க்தி ய்டன் வளர்ற வேண்டுமென்றும் எல்லா பெற்றோர்களும் மனதில் சங்கல்பம் வைத்துக்கொண்டால் போதுமானது . போட்டி மனபான்மாயில் ஒரு பெருமைக்காகவே தனியார் பள்ளி மோகம் வளர்ந்துகொண்டு இருக்கிறது எனலாம். அரசு பள்ளிகூடத்தில் படித்தவர்கள் உயர் பதவிக்கு செல்லவில்லையா ? ஒரு குழந்தை சிறந்தவனாக வளர்வது என்பது பள்ளிகூட வலிகாட்டுதளைவிட பெற்றோகளின் வலிகாட்டுதளினால்தான். பள்ளிகூடத்தில் ஊர் உலகம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அனால் குழந்தைகள் பெற்றோகள் சொல்வதைத்தான் மனதில் ஆழமாக பதியவைத்து எதிர்காலவழ்வை நிர்ணயிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் இருக்கும்வரை பிள்ளைகள் நேர்மையாக திரமையானவனாக கடவுள் நம்பிக்கையுடன் வாழ்கிறானா ? என்று கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது பளிகூடதிர்க்கு அல்ல...நன்றி...


லக்ஷ்மனமுர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே