பாஸ்கர்- கருத்துகள்

உறவுகளின் வலிமை உணர்த்தும் அழகிய கவிதை!

மிக்க நன்றி மணி அவர்களே!
இது, ஒரே வித சந்தத்தில் எழுந்த "தரவு கொச்சகக்கலிப்பா"
அண்ணாமலையாரின் அருளால் தங்கு தடையின்றி வந்திருக்கிறது!

நல்லது!
அதே வேளையில் மரபுக்கும் இடங்கொடுங்கள்.
நன்றி!

வணக்கம்!
இந்தக் கவிதைப் போட்டியில் மரபுக்கவிதைகளுக்கு இடமுண்டா?!
இருப்பின், அடிக்கு ஐந்து சீரென வரையறை செய்த தாங்கள், நெடிலடிகளாலான "கட்டளைக்கலிதுறை" பாக்கள் இயற்றும்படிக்கு முதலடியை வெண்டளை பிறழாது அமைத்திருக்கலாமே?!
என் ஐயம் தீர்ப்பீர்!
நன்றி!

மனிதாபிமானமற்ற செயல்.
மனிதனில் ஒளிந்திருக்கும் மிருகத்தின், அதித வெளிப்பாடு.
விதிவிலக்குதானே என்று விசனப்படாமல் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட வருத்தத்தின் வெளிப்பாடாய் எழுந்த இந்தக் கவிதை, பாராட்டுதலுக்குரியது!
யாவரும் உணரும்படியான எளிய நடை இக்கவிதையின் சிறப்பு!

உண்மையில், உள்ளங்கையில் இருக்கும் பணத்திற்குதான் உற்சவமும், மரியாதையும்.
உள்ளிருக்கும் கல்லுக்கு இரண்டாமிடந்தான்.
அதனால்தான் பணமிருப்பவன் கடவுளின் மிக அருகிலிருக்கிறான்!
பக்தியிருப்பவன் மிகத் தொலைவிலிருக்கிறான்!
மனுதர்மப்படியும், மனோதர்மப்படியும் இது தவறோ... தவறு!

ஆகா... அற்புதம், அற்புதம்!
பாரதத்தின் பண்டைய வெற்றிகள் மேலும் பலவற்றை சேர்த்துக் கூறினால், "இயன்மொழி"க்கு இன்னும் மெருகூட்டும்!
நாட்டுப் பற்றை மரபு நீர் ஊற்றி வளர்க்கும் உங்கள் செயல், போற்றுதலுக்குறியது!

துணைக்கு ஆள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!
உங்கள், மரபு சார்ந்த எழுத்துகள் அனைத்தும் அற்புதம்!

தான் அனுபவித்த கோடையின் வெம்மையை பிரதிபலிக்கும் செங்கொன்றையின் அழகு, அனைவரையும் ஈர்க்கும் தன்மையது.
உங்கள் கவிதையைப் போல!

அப்பப்பா...
காலங் கடந்தாலும், கருப்பொருள் மாறாத கவிதையை
குறிஞ்சியாய் பூக்க வைத்த நீர்,
இக்காலக் கபிலனே!

சிணுங்கி ஒளியுமிழும் செல்பேசி கொண்டு, ஐயப்பாடு கலைந்து, மானுடனேவெனத் தேரல், நவீன உத்தி!


பாஸ்கர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே