muthunaadan- கருத்துகள்

நன்றிகள் சூறாவளி உடன்பிறப்பே !

மிக்க நன்றி உடன்பிறப்பு சூறாவளி அவர்களே !

நன்றி உடன்பிறப்பு சூறாவளி அவர்களே !

நன்றி அஹமது அலி மற்றும் பானுகி
இருவருக்கும் ! - முத்து நாடன்

அறிமுகமே கவிதையாய் இருக்க ஏன் கவிதைகள் எழுதவில்லை உடன்பிறப்பே ! திருப்பு முனை தரும் தலமாம் திருச்சி வாழ் உடன்பிறப்பிடம் கவிதைகள் எதிர்பார்க்கும் வாசகன் -வாடாத அன்புடன் - உடன்பிறப்பு -முத்து நாடன்

நன்றி உடன்பிறப்பே ! சிகரத்தில் நிற்பவர் நீங்கள் ; நானோ அகரத்தை இப்பொழுதுதான் எழுதவே தொடங்கியவன்... உங்கள் பாராட்டுகள் நான் everest சிகரத்திலே ஏறி நிற்கும் போதும் மூச்சுக் கொடுக்கும் காற்று! வாழ்த்துங்கள் ! வணங்குகிறேன் - வாடாத அன்புடன் - உடன்பிறப்பு - முத்து நாடன்

நன்றி சுந்தர் ! நட்பு தொடர்வோம் ! எழுத்து மூலமாக ! - வாடாத அன்புடன் - முத்து நாடன்

அன்பு உடன்பிறப்பிற்கு ! தங்கள் எதிர்காலம் இனிய நற்காலமாய்த் துலங்கிட இந்த அண்ணனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள் ! தொடர்ந்து எழுதும் உங்கள் கை வண்ணம் இன்னும் நன்கு மிளிர, தமிழ்த் தாய் தங்களுக்கு தன் குளிர்மை பொருந்திய ஆசிகளை வழங்கிட மனதார வேண்டும் - வாடாத அன்புடன் உங்கள் உடன்பிறப்பு - முத்து நாடன்

கிருஷ்ண ஹரி! என்ன அருமையான வார்த்தைகள் மற்றும் உங்கள் சொல் விளையாட்டு? மின்னுகின்றன தங்கள் கவிதைகளில் தமிழின் தங்க ஒளி ரேகைகள் ! தாராளமான பாராட்டுகள் ஏராளாமாக உங்களுக்குத் தந்திடலாம் ! வாழ்க ! உங்கள் கவிதை நயம் ! என்றும் பாராட்டுக்கு உரிய நல்லவர் நீங்கள் - வாடாத அன்புடன் - உடன்பிறப்பு - முத்து நாடன்

மதுரையில் பிறந்த மருத்துவத் திலகமே ! கவிதையூரில் நீங்கள் என்றும் கன்னி !
அனுபவக் கைலாசம் அடைந்த அப்பர் !
சோலையூரில் பிறந்த உங்களை இன்று சோழன் கண்டிருந்தால், வரலாறு பதிவு செய்திருக்கும்: "எங்கள் அய்யா, டாக்டர் வ.க.கண்னியப்பனைக் கண்டு சோழனுவந்தான்!", என்று. தங்கள் தமிழ்ப் பணியும், மருத்துவப் பணியைப் போல் சிறந்து விளங்கி, அகக் கண்ணையும், புறக் கண்ணையும் தமிழர்களுக்குத் திறந்துவிடட்டும்! என்றும் உங்கள் உடன்பிறப்பு வாடாத அன்புடன் - முத்து நாடன். புத்தாண்டு வாழ்த்துகள் !

முல்லைக்குத் தேர் ஈந்தான் பறம்புமலைப் பாரி மன்னன்! எங்கள் பைந்தமிழுக்கு எத்தனை கோடி கவி மலர்கள் குவித்தான் எங்கள் ஹரி ஹர நாராயண அண்ணன் ! அவர் புகுந்து செல்லும் புயல் வழியில் நாங்களோ அவர் புகழ் பரப்பும் மணமாய் தொடர்ந்து செல்வோம் ! படையுங்கள் ஆயிரம் கவிதைகள் அண்ணா! நீங்கள் கவிதை மேடையில் முழங்கும் அறிஞர் அண்ணா! தம்பி நாங்கள் உள்ளோம் படைக்கு அஞ்சாதீர் எங்கள் இதய மன்னா!- வாடாத அன்புடன் - முத்து நாடன்

அன்பு உடன்பிறப்பே ! தங்களின் தனிமை எம் தமிழ் பெற்ற இனிமை! கவிதையின் பொருளில், உள்ளடக்கத்தில், எளிமையில் நீங்கள் ஒரு தோகை விரித்தாடும் ஆண் மயில்! உங்கள் முயற்சிகள் வெல்ல என் இனிய தமிழோடு இதயமார்ந்த நல் வாழ்த்துகள் - வாடாத அன்புடன் - முத்து நாடன் .

தங்கள் ஆசிகளைத் தலை வணங்கி ஏற்றுக் கொண்டு, அந்த வாழ்த்துகளுக்கு என்னை தகுந்த ஆளாக மாற்றிக் கொள்வேன் ; அதற்காக என்னைக் கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன் ; காலம் கனிந்து கிடக்கிறது எனக்காக ; அதை விரைவில் கொண்டுவரும் வாகனமாக உங்கள் நல்ஆசிகள்; நன்றியுடன் - உங்கள் உடன்பிறப்பு - முத்து நாடன் (ஈஸ்வர் என்றும் எங்களை வாழ்த்துங்கள் )

என் பிரியமான உடன்பிறப்பே ! உங்கள் எதிர்காலம் கலங்கரை விளக்கின் ஒளி கண்ட கலம் போல் சந்தோசமாகவும், சங்கீதம் வெளிப்படுத்தும் சாதகப் பறவையின் குதூகலமாகவும் நிறைந்திருக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் ஆசிகள் -வாடாத அன்புடன் - உங்கள் அனைத்துக் கவிதைகளையும் தவறாமல் படித்து மகிழும் உடன்பிறப்பு - முத்து நாடன்.

பாசங்கு இல்லாத உங்களின் பாசமும் பன்முனை (கவிதையில்) வளர்ச்சி பெற நீங்கள் செலுத்தும் ஆர்வமும் என்னை உங்களை வாழ்த்தச் சொல்லித் தூண்டியது ; உங்கள் வாழ்வும் கவிதை ஆர்வமும் இன்னும் மேல் நோக்கிப் பயணிக்க என்றும் என் ஆசிகளும், விழைவுகளும் உண்டு உடன்பிறப்பே ! - வாடாத அன்புடன் முத்து நாடன் சொல்லி

நன்றி! நன்றி! நன்றி! நன்றியோ நன்றி!! என் அருமை உடன்பிறப்பே - முத்து நாடன்

"நெருப்பு", என்று சொன்னால் நாக்கில் சுடாதுதான் உடன்பிறப்பே ! ஆனால் சுட்டுவிடும் மனத் தூண்டுதல்களை அது உருவாக்கலாம் அல்லவா? மற்றபடி உங்களைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்றோ, உங்களைக் குறை சொல்லி உங்கள் மனதைப் புண்படுத்தவேண்டும் என்றோ நான் சொல்லவில்லை...மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்-தவறு இருந்தால்-என்னை மன்னியுங்கள் . என்றும் நீங்கள் நல்லாய் இருக்கணும்; நல்லாய் வளரணும். வாடாத அன்புடன், உங்கள் உடன்பிறப்பு - முத்து நாடன்.

இன்றைக்குத் தூங்கும்போது கனவில் கட்டாயம் பாம்பு வரும் எனக்கு!
பாதிப்பு -அந்த அளவு நினைவின் கழுத்தில் மலைப் பாம்பாய் சுற்றித் திரிகிறது நிலா ! கவிதை அருமை வழக்கம் போல ! பாராட்டும் வழக்கம் போல என் இதயத்தில் இருந்து - முத்து நாடன்

இரண்டாம் வரியில் ஒரு தவறு "அனுபவிக்காதவர்கள்" என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்; மன்னிப்புடன் - முத்து நாடன்

அருமை நிலா ! இந்த ஆதங்கம் ஆற்றாமை எல்லாமே அனுபவிக்காதர்வர்கள் எவரும் இல்லை ! எங்களின் நெஞ்சக் கிடக்கையை இவ்வளவு தெளிவாய் அழகாய் உங்களை விட யார் சொல்லிவிடப் போகிறார்கள் ? பாராட்டுகள் வாழ்த்துகள் நிலாவுக்கு - முத்து நாடன்


muthunaadan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே