ஆளப் போறான் தமிழன் - தமிழர்கள் பற்றி பேசும் போட்டி
நம் தமிழ் மொழியும், தமிழர்களும் நீண்ட நெடிய வரலாறு கொண்டவர்கள். நம் வாழ்க்கைமுறை, மொழியின் தொன்மை, பண்பாடு ஆகியவை இயல்பிலேயே நமக்குத் தன்னம்பிக்கை தருபவை. இன்றைய சூழலில் நமது பண்பாட்டின் - மொழியின் சிறப்புகளை குறித்து விரிவாக பேசி, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அதுகுறித்தான புரிதலை ஏற்படுத்துவது இன்றியமையாதது.
அப்படிப்பட்ட தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும், தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், நமக்கே உரித்தான சிறப்புகள் (ஜல்லிக்கட்டு, திருக்குறள் போன்றவை), நமக்குக் கிடைத்த தலைவர்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழ்நாடு தனித்து தெரிவதன் காரணங்கள், நம் தொலைநோக்குப் பார்வை, நமது வரலாறு எனத் தமிழர்களின் பெருமைகள் அனைத்தையும் பதிவு செய்வதே இந்தப் போட்டியின் நோக்கம். நிறைகளோடு குறைகளையும் சேர்த்தே எழுதலாம். அவை நம்மை மேம்படுத்த உதவும்.
போட்டிக்கு கதை - கட்டுரை என இரண்டும் அனுப்பலாம்.
ஒருவர் அதிகபட்சம் 3 கதைகள் - 3 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.
மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் (கதைக்கு ஒன்று, கட்டுரைக்கு ஒன்று). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் (கதைக்கு ஒன்று, கட்டுரைக்கு ஒன்று). அனைத்திற்கும் தலா 1000ரூபாய் பரிசு வழங்கப்படும்.
படைப்புகளை மேலே புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
போட்டிக்கு வந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து மின்னூலாக பதிப்பிக்கவிருக்கிறோம்.
மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஆளப் போறான் தமிழன்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.
படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதி அனுப்பவும். அதிகப் பிழைகள் இருந்தால் பரிசு பெறும் படைப்பாக தேர்ந்தெடுக்கப்படாது.
படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.
படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் - ஜனவரி 27, 2017.
படைப்புகள் ஜனவரி 31 ஆம் தேதி வாசகர் பார்வைக்கு வைக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் அன்றே தெரிவிக்கப்படும்.
படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.
தொடர்புக்கு – 9206706899.
ஆளப் போறான் தமிழன் - தமிழர்கள் பற்றி பேசும் போட்டி போட்டி | Competition at Eluthu.com