எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் யுகபாரதியின் கவிதை இந்த வார ஆனந்த விகடனில்...

கவிஞர் யுகபாரதியின் கவிதை இந்த வார ஆனந்த விகடனில் ..............
இரயில் கவிதைகள் எனும் தலைப்பில் வெளிவந்து இருக்கிறது,, அதில் ஒன்று ....
-----------------
எங்கேயும் நிற்காது

குறித்த நேரத்தில் போய்விடும்

மூன்று மாதத்திற்கு

முன்பே செய்த முன்பதிவு

என்பதால்

படுக்கையோ இருக்கையோ

பிரச்னை இல்லை

மேலும், இந்த ரயில் இதுவரை

தடம் புரண்டதாகவோ

வழியில் நின்றதாகவோ

தகவல் இல்லை

ஓரளவு சுத்தமாயிருக்கிறது

சன்னலையும் கதவையும்கூட

சங்கடமில்லாமல்

திறக்க முடிகிறது

குடிக்கத் தண்ணீர்

கொறிக்கத் தின்பண்டம்

படிக்கப் புத்தகம் இவற்றோடு

நகரத் தொடங்கியது வண்டி

நடைமேடையைவிட்டு

உட்கார்ந்திருக்கிறோம்

ஒவ்வொருவரும்

ஒருவித அச்சத்துடன்!



போய்ச் சேர்ந்த பிறகு

இந்த ரயில்பாதையில் இருந்து

கண்டெடுத்துவிடக் கூடாதே

இன்னோர் இளவரசனை

இன்னொரு கோகுல்ராஜை.


இந்த கவிதையும் .... நான் எழுதிய" தடம் புரணடக் காலம்" கவிதையும் கிட்டத்தட்ட ஒரே களம் என்றாலும் ... கவிஞர் யுக பாரதியின் பாதிப்பு என்னுள் இருக்கிறது என்றாலும் ..நான் கவிஞர் யுகபாரதியின் ரசிகன் என்றாலும் .. நான் எழுதிய கவிதையில் . சொல்லப்பட்ட விதம் வேறு. சொல்லப்பட்ட சிந்தை வேறு . கவிஞரின் இந்த கவிதை பிரசுரம் ஆவதற்கு முன்னரே என் டைரியில் எழுதி இருந்தேன் . காப்பி அடித்ததாக சொல்லும் அந்த தோழருக்கு இந்த விளக்கம் .

நான் எழுதிய கவிதை இது .:

தடம்புரண்டக் காலம்
-------------------------------------
அதி வேகமாக சென்ற
அந்த இரயில்
தடம் புரளாமல் கச்சிதமாக
தன்னை
அந்த இடத்திலிருந்து
கடத்திக்கொண்டது.
கடந்தப்பின்
தடம்புரண்டோடியது
நிறைய இரத்தம்
அபூர்வ காதல்
அதிப்பயங்கர ஜாதிவெறி
அமங்களமான அரசியல்.
அநியாயமான தர்மம்
அவலட்சண ஊடகநாற்றம்
எல்லாம் எல்லாம்
தடம்புரண்டோடியது...
கூடவே தடம்புரண்டு
பின்னோக்கிச் சென்றது
காலம்
ஒரு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு...!
அந்த இளைஞன் மேலேறிய
அந்த ரயிலுக்கும்
இந்த கொலைக்கும்
எந்த சம்மந்தமுமில்லையென
நன்றாக தெரியும்
அந்த தருமபுரி தண்டவாளத்திற்கும்....!
**

எனது திறனும் ..எனது ஆளுமையும் வேறு எந்த ஒருவரின் சிந்தனையை திருடுவதாக யாரினும் ஆதாரமாக எடுத்துகாட்டினால் அதன்பிறகு ..என் பேனாவை தூக்கி எறிந்து, எரித்து எழுதுவதை விட்டுவிடுகிறேன் ....! இது சத்தியம் !


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 24-Jul-15, 6:43 pm

மேலே