எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்பிக்கையோடு காத்திருப்போம் -------------------------------------------------------- இதயத் துடிப்பு நிற்கும்வரை ,...

நம்பிக்கையோடு காத்திருப்போம் 

--------------------------------------------------------

  இதயத் துடிப்பு நிற்கும்வரை , சிந்தையில் வெள்ளமென ஓடுவது , சமுதாயம் 
பற்றியும் அடுத்தவர் நலனும் என்பதும் நான் மட்டுமே அறிந்த ஒன்று . நாளுமொரு பிரச்சினை , நொடிக்கொருப் போராட்டம் நாட்டில் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது .


எங்கும் போராட்டம் 
எதற்கும் போராட்டம் 
தீர்வும் எட்டப்படாத நிலை 
திடுக்கிடும் திருப்பங்கள் 
திகைக்க வைக்கும் தீர்ப்புகள் 
திருத்தப்படும் சட்டங்கள் 
ஒழிக்கப்படாத வறுமை 
அழியாத சாதிமத வெறி 
வெறுக்கத்தக்க அரசியல் 
நிர்வாக சீர்கேடுகள் 
அராஜகப் போக்கு 
சீண்டிடும் மொழித்திணிப்பு 
தீண்டிடும் தீவிரவாதம் 


நாளும் அரங்கேறும் அலங்கோலங்களின் அட்டவணை இது . 
வன்முறைக் காரணிகளின் அணிவகுப்பு இது . 
மனத்திரையில் ஓடும் காட்சிகளின் தொகுப்பு இது .


அனைத்தும் மாறிட வேண்டும் . 
நம்பிக்கையோடு காத்திருப்போம் !


பழனி குமார்   

நாள் : 17-Sep-19, 6:14 pm

மேலே