எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நெஞ்சோரம் நிற்கிறாய் அவளுக்காக நானும் எனக்காக நீயும்...

என் நெஞ்சோரம் நிற்கிறாய்   


அவளுக்காக நானும் 
எனக்காக நீயும் 
ஏன் இப்படி போராடிக் கொண்டிருக்கிறோம்?   

என் அன்பை அவள் புரிந்தபாடில்லை 
உன் அன்பை நீ துறந்தபாடில்லை 

என் மனம் அவளுடன் அலைய 
நீயோ என் நெஞ்சோரம் நிற்கிறாய் 
நான் வேண்டுமென்று   

 நான் புயலில் சிக்கியிருக்கும் பூ 
பூத்திருந்தும் பயனில்லை 
உதிரப்போகும் என்னிடம் போய் 
உறவாட நினைக்கிறாயே 
உணர்ந்துவிட மாட்டாயா?      

ராஜேஷ் போஜன்  
Join me on insta: poetrajeshbojan
  

பதிவு : poetrajeshbojan
நாள் : 20-Sep-19, 8:11 pm

மேலே