எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உப்புமா - ஒரு கவிதை எழுகடல் புகுந்த சிறு...

உப்புமா - ஒரு கவிதை


எழுகடல் புகுந்த சிறு குண்டள்ளிப் போட
அது வெடித்து சிதற
வெங்காயங்கள் வெட்டுப்பட்டு 
வதங்க- பின்பும்
மனமிளகா மல்லுக்கு நிற்க
ஆறாமல்
மேலும் பற்பல இடிபடும்
கடின ரவைகள்
எறிந்து பட
மேகக் கண்ணீர் கடல் வடித்த
மணல் சேர்க்க
ஆங்கே
ஒரு ஆக்ரோஷ கலவை
செய்தேனடி
உனக்கே உனக்காக
உப்புமா கிண்டினேனடி
எனக்கே எனக்கான காலையில்!

மோக்‌ஷா 😀

பதிவு : மோக்‌ஷா
நாள் : 24-Jan-22, 5:17 am

மேலே