குடியிருந்தாளோ அதிகாலை -மறையும் நிலவிலும் தோன்றும் கதிரவனிலும்... இல்லம்...
குடியிருந்தாளோ
அதிகாலை -மறையும் நிலவிலும்
தோன்றும் கதிரவனிலும்...
இல்லம் இருள் கொண்டாலும்
உள்ளம் இருள் கொண்டாலும்
இருள் விலக்கும் விளக்காகிறாள்...
விளக்கில் வாழும் எண்ணையாகவும்
தியாகம் செய்யும் திரியாகவும் திகழ்கிறாள்...
நஞ்சினை ஈன்றாலும் நங்கையவள் நினைத்திடுவாள்
நல்லதே செய்து நல்லறிவு புகட்டிட..
நகர்ந்து மாறுவது காலமும்..
மங்கை மார்களின் முகமுமே அன்றி..
மாரிடப்போவதில்லை மனமும் குணமும்...
மங்கை மார்களின்-தாய்மை மனமும் குணமும்...
தாய் துவங்கி தாரம் வரை தாய்மைப்பண்பு மாறாத அவள்...
*அவளாக மட்டுமன்றி*
*வாழ்வின் ஆதி தோன்றி அந்தம் தொடும்வரை யாவுமாய் விளங்குகிறாள்....*
_மீனா