என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது...!!
என்னை நினைத்தால் எனக்கே
சிரிப்பு வருகிறது...!!
எதையோ ஒன்றை தேடித் தேடி
என்னை தொலைத்து கொண்டிருக்கிறேன்..!!
எந்த குறிக்கோளும் இல்லாமல்
கண்ணாடியில் என்னை நானே
திட்டி கொண்டிருக்கும் போது,
என் வீட்டு கண்ணாடியும்
முகத்தில் எச்சில் உமிழ்ந்து கேட்டது,
நீ என்ன கிழித்து விட்டாய்..!!!
முன் இரவு தூங்கும் போது
பெரிதாய் சாதிக்க வேண்டும் என
கனவுகளுடன் கண் மூடுகிறேன்..!!
மறுநாள் காலை பொழுது விடியும் முன்
என் கனவு கலைந்து விடுகிறது..!!
என்னுடன் நடந்த கால்களுக்கு தெரியும்
என் தேடலின் தூரம் ..!!
என்னுடன் ஓடிய கடிகாரத்திற்கு புரியும்
நான் தொலைத்த நேரம்..!!
தேடலில் நான் ஒருவனால்
ஏமாற்றப்படும் போது மட்டுமே
எனக்கான தகுதிகளை
அறிந்து கொள்கிறேன்..!!
என்னை ஒதுக்கியவர்களிடம் தான்
நான் கற்று கொள்கிறேன்..!!
யாரோ எழுதிவைத்த
என் தலைவிதியை
நான் நம்ப போவதில்லை..!!
திடிரென கிடைக்கும்
அந்த அதிர்ஷ்டமும்
எனக்கு தேவையில்லை...!!
என் தவறுக்கு கடவுளை
குறை சொல்ல போவதில்லை..!!
எனக்காக என்ன நடந்தாலும்
அது எனக்கானது மட்டுமே..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
