ஆதலால் காதல் செய்வேன்...!!!!

முதல் பார்வையிலே
உன்னை செயலிழக்க செய்வேன்,
துடிக்கும் என் இதயம் வைத்து
உன் இதயம் திருடுவேன்..!!!
வண்ணம் வண்ணமாக
வானம் பறக்கிறதே..??
உன்னை நினைத்து கவிதை
எழுத அழைக்கிறதே..!!
உன்னை வைத்து நான் சொல்லும்
பொய்கள் கூட அழகாகிறதே,
இதனால் சில உண்மைகள் கூட
சண்டைக்கு வருகிறதே..!!
உன்னை பற்றி கேட்காமல்
என்னை பற்றி சொல்வேனே.!!
நீ தவறுகள் செய்தால்
உடனே மறப்பேனே...!!
உன் சம்மதம்
எனக்கு தேவையில்லை,
என் காதல் புரிந்தால்
அது போதுமே...!!
உன் புரியாத வெக்கம்
அது தேவையில்லை
உன் புரிகின்ற கோவம்
எனக்கு போதுமே..!!
என் சோகம் என் பாவம்
அது தேவையில்லை,
உன் காதல் உன் இன்பம்
அது போதுமே...!!
திடிரென சிரிப்பாயே
நான் ரசித்தால் உடனே முறைப்பாயே..!!
மறுமுறை சிரிப்பாயே
நான் ரசிக்க மறுத்தால்
உடனே வெருப்பாயே..!!
புதிதாய் தண்டனை தந்தாளே,
எனக்கென்னமோ சுகமாய் தெரிகிறதே,
ஆதலால் காதல் செய்வேனே...!!