மாசில்லா உண்மைக் காதலே...!!!!

மெய்சிலிர்க்க செய்யும் உந்தன்
மெல்லிய கரம் தொட்டு
எந்நெஞ்சில் புகுத்திய உன் அழுத்தம்
இரும்பு திரையிட்ட இதயத்தை
திறந்து விட்டது..!!
இது ஒன்றும் அதிசயமல்ல,
இனிபெரும் நிகழ்வுகள்
இதயத்தினுள்ளே நடந்தேறினால்
அது உன்னை சார்ந்தே இருக்கும்..!!
எப்படி என்னை சேர வேண்டுமென
சிந்தித்தாய் என நீ தெரிவிக்க வேண்டாம்,
இப்படியெல்லாம் நான் தோற்று போவேன்
என எனக்கு நீ காட்டியதே போதும்..!!
அதிகம் பேசாத உன் இதழ்கள் திறந்து
ஒற்றை வார்த்தை சொன்னால் போதும்,
இந்த உலகமென்ன உலகம்
வேற்று கிரகம் கூட வென்று
நான் உனக்கு பரிசளிக்கிறேன்..!!
வேதியியல் மாற்றமொன்றை
என்னுள் நிகழ்த்தி,
எண்ணிலடங்காத ஆசைகளையும்
தீராத ஏக்கங்களையும்,
நேர்கோட்டில் பயணிக்க செய்து
என்னுள்ளே உன்னை புகுத்தி
காதல் விதைத்து விட்டாய்..!!
இங்கு தான் என் தோல்வி
ஒப்புகொள்ள படுகிறது,
எத்தனை முறை உன்னை புகழ்ந்தாலும்
ஒன்றுமறியா மங்கை போல் நின்று
என்னிடம் நீ வென்று விடுகிறாய்..!!
என் இதயம் அர்ப்பணித்து விட்டு
ஒன்று கேட்கிறேன்,
போதும் நிறுத்திவிடு
இப்பிறவிக்கு இக்காதல் போதும்
மறுபிறவியில் மீண்டும் சந்தித்தால்
மீதியை பெற்று கொள்கிறேன்...!!