மனிதக் காட்சி சாலை மனிதர்கள்...!!!

அவள் போகாத கோவிலும் இல்லை,
சுற்றாத மரமும் இல்லை,
இருக்காத விரதமும் இல்லை,
இப்படி தன்னை வருத்தி அழித்து
தனக்கொரு மகன் பிறக்க
மரணம் வரை சென்று மீண்ட
தாய்க்கு அன்பு மகனின் பரிசு
முதியோர் இல்லம் சேர்ப்பு..!!

முதுமையில் அவள் உன்னுடன் இருப்பதை
அசிங்கமாய் பார்க்கிறாயே..!!
உன் எச்சில் ஊறிய சோறும்,
அவள் மேல் சிதறிய சிறுநீர் வாசனையும்,
என்றாவது அவளுக்கு
அசிங்கமாய் தோன்றி இருக்குமா...???

எதனை வைத்து அவளை பாரமென
நீ எண்ணி விட்டாய்..!!
காற்று படாமல் உன்னை
பொத்தி பொத்தி வளர்த்ததற்கா..??
இல்லை நீ உறங்க அவள் உறங்காமல்
விழிந்திருந்த பாவத்திற்கா..??

ஆசையாய் உன்னை வளர்த்த அவளை
வீட்டிலிருந்து வேருடன் பிடுங்கி
வேறிடத்தில் நட்டு வைக்கிறாய்..!!
உனக்கு சொர்க்கம் காட்டிய அவளை
உயிரோடு நரகத்தில் சேர்க்கிறாய்..!!

உன் தாய் அங்கே போகும் போது
அந்த மனித கட்சி சாலை மனிதர்கள்
இரக்கமாய் பார்க்கின்றனர்
இன்னுமொரு உடல்
உயிரை எங்கோவிட்டு விட்டு
இங்கே வருகிறதே..!!!

அதிலும் ஒரு வினோதம்
அந்நிலையிலும் எந்த தாய்க்கும்
மகனின் மேல் துளி கூட கோவமில்லை
அவன் உடல் பற்றிய கவலை மட்டுமே..!!

எழுதியவர் : மனோ ரெட் (5-Jul-13, 1:37 pm)
பார்வை : 91

மேலே