தமிழின் பெருமை

அமுதம் என்பர் எங்கள் தீந்தமிழை

ஆரணமாய் அமைந்திருக்கும் அதன் எழுத்துக்கள்

அவை சேர்ந்து வந்ததுதான்

இயல்,இசை ,நாடகத் தமிழ்

ஈர்ந்திடுமே உலகோரை இலக்கணக் கட்டுப்பாட்டால்

உலகுக்கு பொது வேதம் இதன் திருக்குறளாம்

ஊனையும் உருக்கும் இதன் திருவருட்பா


எல்லையில்லா அழகு இதன் கம்பன் காப்பியம்

ஏற்றம் தந்திடும் அவ்வையின் ஆத்திச்சூடி

ஐம்பெரும் காப்பியங்கள் தந்த மொழி

ஒரு நாளும் தமிழர் நாம் நம்மொழியை

மறந்திடலாகாது; தாயை மறத்தல் ஏற்றம் தாராது

ஓதுவார்க்கும் ஏற்ற இனிய மொழி

ஒளனமாம் (மிளகு ரசம்)பானம் தந்த மொழி

' வாழிய செந்தமிழ் வாழியவே

வாழ்க நற்றமிழர் வாழியவே '.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-16, 1:36 pm)
Tanglish : thamizhin perumai
பார்வை : 7096

மேலே