ஜன்னலுக்குள் நிலவு நீ 555

என்னுயிரே...

என் மழலை பருவத்தில் நிலவை
காட்டி எனக்கு அன்னம் கொடுத்தார் தாய்...

பள்ளிவயதில்
நானும் ரசித்தேன்...

பௌர்ணமி நிலவையும்
பிறை நிலவையும்...

இருநிலவுக்கும்
சிலநாட்கள் வித்தியாசம்...

இன்று பருவ வயதில் நான்
தினம் தினம் ரசிக்கிறேன்...

பௌர்ணமி நிலவையும் பிறை
நிலவையும் ஒரே நேரத்தில்...

ஜன்னலுக்குள் உன்
முழுமுகம் பௌர்ணமி நிலவு...

உன் நெற்றியோ
வளர்பிறை...

ஜன்னலுக்குள் இருந்து
ஜாடை காட்டுபவளே...

ஜன்னல் கம்பியாக ருக்கும்
எனக்கு சம்மதம் தருவாயா...

உன் சந்தன மேனியை
எனக்கு சம்மதமாக தருவாயா...

எனக்கானவளே நான்
காத்திருக்கிறேன்...

அந்த ஜன்னலுக்குள்
வெளியே...

இருஜன்னல்கள் பூட்டிய அறையில்
நீயும் நானும் தனிமையில்...

காதல் மனைவியாக அந்த
முதல்நாள் இரவில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Jan-17, 9:48 pm)
பார்வை : 378

மேலே