சிவப்பு - Mano Red
![](https://eluthu.com/images/loading.gif)
இந்த நிறம்
இதயத்தின் நிறம்.
இந்த நிறம்
துடிக்கச் செய்கிறது.
உற்றுப் பார்த்ததும்
வீறு கொண்டு எழச் செய்கிறது.
வண்ணத்தில் சிறப்பாகவும்
சாலையில் அபாயமாகவும்
வறுமையின் முகவரியாகவும்
புரட்சியின் அடையாளமாகவும்
இன்பத்தின் விளக்காகவும்
இருக்கும் உனக்கு
இத்தனை நிறங்களா?