நகரத்தில் வராத விடியல்..???
சொர்க்கமாக மாற நினைத்து
நரகமாக மாறி வரும்
நகரங்களின் நிலைமை...!!!
எப்போதும் ஓய்வில்லாத சாலைகள்,
எதையோ தேடி அலையும் பேருந்துகள்,
கண்ணீர் புகை தரும் வாகனங்கள்..!!!
ஆட்டோவில் செல்வதற்கு
கடன் தர காத்திருக்கும் வங்கிகள்,
சேர்த்த பணத்தை வாரி சுருட்ட
வந்திருக்கும் முகமூடிய கருப்பு ஆடுகள்.
உலகத்தை ஒரு ஏக்கருக்குள்
கொண்டு வந்த நில அதிபர்கள்,
சோறு போட்ட வயலையும்
கூறு போட்டு விற்ற முதலாளிகள்.
நோயை தரும் துரித உணவகம்,
நேரத்தை கொன்ற சினிமா கலையரங்கம்,
கலாச்சாரம் வளர்க்க இரவு விடுதிகள்,
தன்னையே தொலைக்க ஆன்மீக உறவுகள்.
யாரை பற்றியும் கவலைபடாத மக்கள்,
தூங்கிகொண்டிருக்கும் நியாய பக்கங்கள்,
சாதாரணமான மனித கொலைகள்,
சாகதுடிக்கும் நம் முதிய தலைகள்.
இந்த நரகத்திற்காக,
சூரியன் தினம் வந்துவிடும்,
நிலவும் தன் முகம் காட்டிவிடும்,
காற்றும் தன் பங்கு கடமையை செய்துவிடும்,
மழையும் இவற்றை எண்ணி அழுதுவிடும்,
ஏனோ தெரியவில்லை
இவைகளுக்குக்கான விடியல் மட்டும்
இன்னும் தேடி வரவில்லை...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
