தினம் தினம் புத்தாண்டு தான்....!!!!

நாம் ஏன் பிறந்தோம் என்பதே
கேள்விக்குறியாக இருக்கும்போது,
புத்தாண்டு பிறப்பதை எண்ணி
பெருமகிழ்ச்சி கொள்ளாதே..!!!
பத்தோடு பதினொன்றாக
பூமியில் வாழாதே..!!
சிறந்த பத்து பேரில்
நீ வர தவறாதே....!!
உன் வழியில் நீ திரும்பாமல் இருந்தால்,
உலகம் உன்னை திரும்பி பார்க்கும்..!!
தொலைபேசியில் நேரம் கழிப்பதற்கு,
தொலைநோக்கு பார்வையில் நேரம் செலுத்து,..!!
உனக்கு பிடித்த வாழ்க்கையில்
நீ வெற்றி அடைகிற,
ஒவ்வொரு நாளும் உனக்கு
புத்தாண்டு தான்...!!!
சாதாரண மனிதனாய் வாழ்வதை விட
சாதனை மனிதனாய் வீழ்வது மேல்..!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஒன்றும் வராது...
தருமராசு த பெ முனுசாமி
31-Mar-2025

மத்திய சிறை...
சு சிவசங்கரி
31-Mar-2025
