எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

            அம்மா கவிதை..
காடெல்லாம் சுற்றி கால்களில் செருப்புகள் இன்றி..!!விறகுகள் சுமந்து விறகு அடுப்பில் சாதம் வடித்து..!!முதல் பிடி சாதம் ஓடோடி வந்து ஊட்டுவாயே அம்மா..!!இன்றும் தேடுதம்மா உன் கையால் ஒரு பிடி சாதம்..!!வருடங்கள் போனபின்னும் வயதுகள் போனபின்னும்..!!கவலைகள் வரும்போதெல்லாம் தலைசாய்க்க தாய்மடிதான் வேண்டுமம்மா..!!

மேலும்

             நான் உன் பிள்ளை


அம்மணம் போர்த்தி உதிக்க வச்ச..
அம்மா உன் நடத்தபோல
மதிக்க வச்ச..

தொப்புள்கொடி உறவை தொடங்கி வச்ச..
உதிரம் உதிர்த்து நனையாமல் குளிக்க வச்ச..

 வெதுவெதுப்பாய் இருக்க வேண்டிமெதுமெதுவாய் மடியில் கிடத்த வச்ச..

வெட்கம் ஏதும் கொள்ளாமல் தாய்ப்பாலை எனக்குன்னு தக்க வச்ச..

பகல் சூரியன் இருந்தும் நிலவை ஏங்க வச்ச..
நீ சோறூட்டிய காட்சிகளை அதில் தேங்க வச்ச...

பட்டறிவு தேவையின்னு படிக்க வச்ச..
பத்து வருஷம் அதுக்குன்னு பணத்த உழைச்ச...

வீடு வாங்க வீட்டு வேலை செஞ்ச
காரு வாங்க காட்டு வேலை புரிஞ்ச..

தீபாவளிக்கு எனக்குன்னு சட்டை தச்ச..
தீரா வலிக்கு எதுக்கு நீ விட்ட மூச்ச..

நீ வாங்கிகொடுத்த மரப்பாச்சி பொம்மையும் மறுத்துப்போய் கிடக்குதம்மா..

நீ வாரிவிட்ட தலைவகிடும் வழித்தெரியாம  திரியிதம்மா..

எல்லாதையும் தந்துட்டு போன அடிக்கடி என் கனவுலையும் வந்துட்டு போன..

நீ ஈன்ற என்னை இனிமேல் சுமக்க யாருமில்ல..

உன்னால் பூத்த மலரை தொடுக்க  நாருமில்ல..

இது மாறவில்ல..

நான் உன் பிள்ள..
                                              -ஜாக்.✍️
















மேலும்

என் தாயின் இளவரசி நான்....


கைகள் கூப்பி வணங்கவில்லை....

காலில் விழுந்தும் ஆசிபெறவில்லை...
ஆனாலும்

தினம் தினம்  அனுக்ரஹமும் ஆசியும் எனக்காக வழங்கும் 
 உயிருள்ள ஒரே  கடவுள் என் அம்மா.....



<அB>


மேலும்

கருவிலே உறவென, உயிரென ஆனேன் உன்னிடத்தே.... 


கலையாத   ஒற்றை காதலும் அது உன்னிடத்தே...

கனவிலும் கலங்கவிட மாட்டேன் ஒருபோதும் உன்னை....

என் உயிர் பிரியும் வரை நீ வாழ வரம் கேட்ப்பேனே கடவுளிடமும்...

அடித்தாலும், அரட்டினாலும்  
அன்பாய் அள்ளி அணைக்கும் 
ஓர் உறவு  நீ ஆனதால்....


நீ மட்டும்  போதும் என் வாழ் நாள் முழுவதும் .....


.....அம்மா...

மேலும்

வாசம் இல்லா மலரானேன்🌻
மலர் இல்லா மரமானேன்🌴
மரம் இல்லா காற்றானேன்💨
காற்று இல்லா கடலானேன்🏝
கடல் இல்லா நிலமானேன்🏞
நிலம் இல்லா பூமியானேன்🏜
பூமி இல்லா வானானேன்⛅
வானம் இல்லா சூரியனாக☀
தனிமை தீயில் நனைந்த             வேலையில்🔥
என்னை தூங்க விட்டு😴 விழிமேல் வழி நின்று காத்த👀  நிலவென நீ -அதன்  நிழலில் நான்!✍
என்றும் உன் சூரிய  புதல்வனாகவே  அம்மா!👸

மேலும்

கர்ணன் --குந்தி தேவி இலக்கியக் காவியம் நினைவலைகள் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:51 pm

                                                                                        கிறுக்கல்கள் 

எனக்கு பிடித்த
 சிறந்த சித்திரம் 
என் குழந்தையின்
  சுவர் கிறுக்கல்கள் 

மேலும்

                            அன்னை


 இவ்வண்டத்தில் வாழ்வதற்கு எனக்கென 
                                                                     ஓர்  வாய்ப்பு  தந்தாய்....
 இறைவன்  என்ற  சொல்லிற்கு    
                                                                  இலக்கணமாய்  திகழ்ந்தாய்....                   
அளவற்ற  அன்பினை  அமுத  மழையாய்                
                                                                   பொழிந்தாய்.....
 எந்தவொரு   எதிர்ப்பார்பின்றி இவ்வனைத்தையும்                   
                                                                    செய்த   உனக்கு,  
 ஈடு  இணையாக யான்  செய்வேனோ.... 
மகிழ்வு   ஒன்றினை  தருவதை   தவிர.......!!      

மேலும்

பத்து மாதங்களாக என்னை வடித்த சிற்பி..
அம்மா

மேலும்


மேலே