எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் முதலமைச்சர் ஆனால்

முதலமைச்சர் கனவுல தமிழ் நாட்டுல
பல பேரு வருச கட்டி நிக்கிறப்போ நமக்கு
அந்த வாய்ப்ப இங்க எனக்கு கொடுத்து
இருக்காங்க!

சரி.. நெஜமாவே முதல் அமைச்சர் ஆயிட்டா ?
என்ன செய்யலாம் அப்படின்னு ராப்பகலா
படு பயங்கரமா யோசனை பண்ணின விளைவுதான்
இது. இத மொக்கையா எடுத்துகிரவங்க மொக்கையா
எடுத்துக்கலாம், சீரியஸா எடுத்துகிரவங்க சீரியஸா
எடுத்துக்கலாம்.

அதாவது!''சிறந்த குடி மக்களை உருவாக்கும் திட்டம்''

பத்தாவது வரை படிச்சவங்களுக்கு 1 புள்ளி

+2 படிச்சவங்களுக்கு 2 புள்ளி

டிகிரி படிச்சவங்களுக்கு 3 புள்ளி

அதுக்கு மேல படிச்சவங்களுக்கு 4 புள்ளி


ரத்த தானம் பண்ணினா ஒரு தடவைக்கு 2 புள்ளி

5 தடவை ரத்த தானம் பண்ணினா போனஸ் 5 புள்ளி

கண் தானம் பண்ணினா 10 புள்ளி

ஓட்டு போட்டா 2 புள்ளி

தொடர்ந்து 3 தடவை ஓட்டு போட்டா போனஸ் 5 புள்ளி

ஒரு குழந்தை பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிரவங்களுக்கு

5 புள்ளி 2 குழந்தை பிறந்த உடன் பண்ணிகிரவங்களுக்கு 2 புள்ளி

அஞ்சு வருஷம் எந்த போலீஸ் கேஸ் ஏதும் இல்லாதவங்களுக்கு 5 புள்ளி

வருமான வரி கட்டினா 5 புள்ளி

புள்ளைங்கள குறைஞ்ச பட்சம் பத்தாவது வரை படிக்க
வைச்சா 5 புள்ளி

சாலை விதிகளை சரியா கடை பிடிச்சா 5 புள்ளி

( சாலை விதிகளை சரியா கடை பிடிக்கிறத எப்படி
கண்டு பிடிக்கிறது? அது யோசனைல இருக்கு )

இப்படி அதிக புள்ளிகள வாங்குறவங்களுக்கு
சிறந்த குடிமன், குடிமகள் சான்றிதழ் வழங்க
படும். புள்ளிகள் வழங்குதல் அந்தந்த துறைகளில்
பெற்று கொள்ளலாம்.

இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க படும்.

இதனால் என்ன பலன் ,,,

சிறந்த குடி மக்களுக்கு வங்கி கடன் வழங்குதல்
எளிதாக்கப்படும்.

இலவச மருத்துவ காப்பீடு வழங்க படும்.

கல்வி துறையில் இவர்களுக்கென தனி இட
ஒதுக்கீடு வழங்க படும்

ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு
கணிசமான அளவு பென்சன் வழங்க படும்.

பஸ்,ரயில்,விமான கட்டணங்களில் சலுகை
அளிக்கப்படும்


மேலும் ஆலோசனைகள் உங்களிடம்

எதிர்பார்க்க படுகிறது.

மேலும்

இன்சென்டிவும் இலவசமும் நிர்வாக வழிமுறை இல்லை. இரயில் விமான பயணம் இலவசம் 5 நட்சத்திர விடுதியில் தங்கல் இலவசம் இலவசம் சோம்பேறிகளை வளர்க்கும். உழைக்கும் குடிமகனை உருவாக்காது. 50 தில் ஓய்வூதியம் அதுவும் கணிசமாக ? Am I correct RAJ ? Sinthikka vivaathikka 28-Sep-2017 8:40 am
இப்படி சிந்தித்தமைக்கு உங்களை பாராட்ட வேண்டும் ... இப்படிப்பட்ட சிந்தனை பல உள்ளங்களில் எழும்போது அரசியல் சாக்கடை சுத்தம் ஆகிவிடும் . நடிகர்கள எல்லாம் அரசியலுக்கு வராங்க நல்லது செயறவனுக்கு எல்லாம் அரசியல் ல வர தைர்யம் இல்ல. சோ மனு தாக்கல் பண்ணிடுங்கோ 28-Sep-2017 1:23 am
முதலமைச்சர் வேட்புமனுதாக்கல் செய்யும்போது என்னை தொடர்பு கொள்ளவும் உங்களுக்காக தேர்தல் வேலைகள் சிறப்பாக செய்கிறேன் எங்கள் ஒட்டு உங்களுக்குத்தான் வெற்றி பெற கடமை கண்ணியம் கட்டுப்பாடு அரசியல் மேலாண்மை நமக்கு இருந்தால் வெற்றி உறுதி 27-Sep-2017 10:18 pm

மேலே