உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பில் (பொங்கல் கவிதை போட்டி)

உழைப்புக்கு பெருமைச் சேர்த்தவன்

இன்று மரணத்தின் விளிம்பில் நிற்க்கிறான்

செம்மண்ணில் ஏர்பூட்டி உழுதவன்

கையில் விஷத்துடன் நிற்கிறான்

சேற்றில் கால்வைத்து கதிரறுத்தவன்

தானுண்ண உணவில்லாமல் தவிக்கிறான்

நித்தம் காலையில்
கதிரவனை வரவேற்றவன்

இன்று கண்முடிக் கொண்டிருக்கிறான்

கல்லிலும் முள்ளிலும் உழைத்தவன்

கல்லறையை தேடிக் கொண்டிருக்கிறான்

காலம் மாற மாற

அவன் துன்பம் நீங்க வில்லை

கவலை தொலைய வில்லை

உழைப்பிலும் உயர்வில்லை

இன்று விவசாயத்திற்க்கும் வாழ்வில்லை

என் பூமி தாய் மறைவதற்கு முன்

நான் மறைகிறேன் மரணத்தை தேடுகிறேன்

விவசாயம் தமிழுக்கு பெருமை

விவசாயம் தமிழனுக்கு பெருமை

விவசாயம் உழைப்புக்கு பெருமை

இன்று விவசாயம் மரணத்தின் அடிமை.

எழுதியவர் : ரவி.சு (7-Jan-13, 10:15 am)
பார்வை : 161

மேலே