உழவனை காப்பாற்று (மானத்தை காப்பாற்று )
உழுவதற்கு நிலமும்மில்லை
உழவனும் இல்லை
கலப்பையும் இல்லை
களை எடுக்க ஆளும்மில்லை
நிலத்தடி நீரும் இல்லை
நீரை பாய்ச்ச கிணறும் இல்லை
கதிர் அறுக்கும் அருவாளும் இல்லை
கதிர் அடிக்க காளையும் இல்லை
அறுவடையான நெல்மணியை
களத்திற்கு கொண்டுசெல்ல
நற்கதியும் இல்லை உழவனுக்கு
தைமகளே நீ நெய் மழையாக
வருகை தந்து , மாண்டழியும்
உழவனின் மானத்தை காப்பாற்று !