பாதி இங்கே ...மீதி எங்கே...?
தோழமை சொந்தங்களே...
ஒரு புது முயற்சி .....
அது தேர்ச்சியும் ....வளர்ச்சியும்..
நிச்சயம் அளிக்கும் நல் பயிற்சி.....
கீழே உள்ள வரிகளை வைத்து இருவர் ஒரு கவிதை எழுத வேண்டும்..
முதலாமவர் 4 வரிகள்...
அடுத்தவர் 12 வரிகள்..
ஓர் அர்த்தம் கொண்டதாக கவிதை உரு பெற வேண்டும்..
வரி ஒன்றுக்கு ஐந்து சொற்களே இருத்தல் வேண்டும்..
சரியா ...தொடங்குவோமா..
முதல் 4 வரிகள்..
"உனக்கான என் பொழுதுகளில்
நான் இருக்க நீ சம்மதிப்பதில்லை.
உன் சம்மதம் எனக்கு பிடிக்குமென்பதாலா ...?
ஆமென்றாகும் போது யார் யார் வசம்?."
நாளை இரவு இதே நேரத்திற்குள் கவிதை முடிக்கப்பட வேண்டும்...
அன்புடன் அகன்