பவர் கட்
மாப்பிளை கண்டு , உறவினர்கள் கொண்டு , காதல் மனம் கண்டு,
விருந்தினர்கள் பலர் வந்து , நிச்சய வேளையில்,
அழையா விருந்தாளி , சொல் இல்லாமல் சென்றதால்,
உலகம் இருண்டு, மணம் காண மன்னவனின்,
அம்மாவின் அவச்சொல் ஏற்று , கண்ணீர் பெருகி ,
காலம் சுழன்று , மனத்தெளிவு வந்தது !
ராக்கெட் காலத்தில் சகுனம் பார்க்கும் வீணர்களும் ,
அதே காலத்தில் , அடிக்கடி ஆகும் ”பவர் கட்’ - லும்
ஊசலாடுகிறது பல பெண்களின் மண வாழ்கை !!!
-பாரதி கண்ணன்
First published in my private blog