நிலவே வெள்ளி நிலவே !
நிலவே வெள்ளி நிலவே !
என்னுள்.நீங்காமல் நிலைத்திருக்கும்
நிறைவான நினைவின் அளவே !
ஆரம்பத்தில் அவ்வளவாய் அபிப்பிராயம்
அற்றவன்தான் நான் உன் மீது
அழகாய் மிக அழகாய்
அன்று தான் அவளின் அறிமுகமே
அழகாய் அறிமுகமானது எனக்கு .
இன்றோ ,
எனக்கு நீ என்றால் நிறைய பிரியம்
நிஜம் தான் நிஜம் தான்
அவளுக்கு நீ என்றால் நிறைய பிரியமாம்
அவள் என்றால் எனக்கு அளவில்லா பிரியம்
இப்போது தெள்ள தெளிவாய் புரியுமே
எனக்கு நீ என்றால் நிறைய நிறைய பிரியம்
நிஜம்தான் ,நிஜம் தான்
நிலவே வெள்ளி நிலவே !
நன்றி கடன் பட்டவன் நான் உனக்கு
நல்லவள் அவள் ,என்னவளுக்கு எப்போதெல்லாம்
ஏக்கம் ,கலக்கம் ,கவலை எல்லை கடந்து
தொல்லை தந்துவிடுகிறதோ அப்பொழுதெல்லாம்
உன் நிழலில் அமர்ந்து தான் ,
தன சோக கரைகளில் போகும் கரைகளை
சலவை செய்துகொள்வாலாம் !
அது தவிர , அவள் முகம் பார்க்க தோன்றினால்
உன் முழு முகம் பார்த்து கொல்ல்வெஇந் .
உன் முழு முகம் பார்க்கும் போதெல்லாம்
அரை பிறையே நானும் அவள் முகம் நினைத்து கொள்வேன் !
நன்றிகடன் பட்டவன் நான் உனக்கு !