!!எதையடா மறப்பது என் அன்பு காதலா !!!

என்னவனே !!!

உன்னை நான் நினைக்க
மறுத்த நொடிகள் !!!
என் வார்த்தைக்காக -நீ
காத்துக்கொண்டிருத்ததே -உன்
இதயம் அந்த நொடிகளையா !!!

உன் காதலை என்னிடம்
நீ சொல்லிய அந்த அழகிய
அந்தி மாலை பொழுதின்
அழகிய நிமிடங்களையா !!!!

நீ என்னை வெறுக்கும்
நொடிகளில் கூட-உன்
மீது நான் கொண்ட காதல்
அதிகரிக்கிறது என்றாயே என்னிடம்
அந்த நிமிடங்களையா!!!

நீ எனக்கு சொந்தமில்லையனில்
உன் மடியில் மடிவேனடி உனக்காக
என்றாயே -அந்த நொடிகளையா !!!

என் பார்வைக்காக -நான்
செல்லும் இடமெலாம் என்னையே
சுற்றி சுற்றி வந்தாயே -அந்த
அழகிய நொடிகளையா !!!

நான் உன்னிடம் வாங்க மறுத்த
நூறு ரூபாய் நோட்டுககாக குடிகாரனாக
மாறினாய் அதையா !!!

இவைகளை எண்ணி உன்னவளாக
நான் உன்னை நேசித்த பொழுது
உண்னவளாக உன் அருகே
அமர்த்த நொடிகளையா !!!

காலம் உள்ளவரை நம்
கைகள் இணைத்திருக்கும் என
எண்ணி உன் விரல் கோர்த்து
நாம் நடத்து சென்ற நொடிகளையா !!!

எதையடா மறப்பது
என் அன்புக் காதலா!!!

என் கவலைகள் மறக்க -உன்
தோள் சாய்த்தேனே -அந்த
அழகிய நொடிகளையா !!!

உன் அழகிய விரல்கள்
என் கண்ணம் தீடியதே !!!
அந்த நொடிகளையா !!!!

காதலர்கள் இல்லையடி நாம்
நம் மனதளவில் கணவன் -மனைவியடி
என்றாயே அந்த நொடிகளையா !!!

இணைத்து வாழ்வோம் -இல்லையே
இருவரும் ஒன்றாக மடிவோம்
என்றாயே அந்த நொடிகளையா !!!

இப்படிஎன்னை ஒவ்வொரு
நொடியும் உன்னை நேசிக்க வைத்து விட்டு
இன்று நீ மாறிவிட்டாயே -
என்னிடம் சொல்லாமல் உன்னை
மறந்து விட்டேனடி என்று

நம் காதல் நினைவுகளுடன்
துடிக்கும் இவள் இதயம்
எப்படியடா மறக்கும் நம் காதலை !!!

உன்னை நேசித்ததுக்கு பரிசோ
உன் நினைவுகள் மட்டும் தான் !!!

காதல் வலிகளை தந்தவனே
அதிலிருந்து நான் விடுபடுவதற்கான
வழிகளை மட்டும் ஏனடா
சொல்லாமல் சென்றாய் !!!

சொல்லி செல்லடா உன் நினைவுகளே
இவள் இதய துடிப்பாக இருக்கும் போது
உன்னை மட்டும் எப்படி மறப்பது என்று !!!

எழுதியவர் : சங்கீதா.k (27-Jan-13, 2:43 pm)
பார்வை : 402

மேலே