காசு தேடல்..!! - 2013
இன்று..
காசு தேடலில்.. காதல் குறைகிறது..!!
கவிதை மட்டுமே எழுதிய கைகள்..!!
வீட்டுக் கணக்கை எழுதுகின்றன..!!
மழையை ரசித்து.. வருடமாகிவிட்டது..!!
மாத கணக்கை ரசிக்க.. மனம் பழகிவிட்டது..!!
இரை தேடும் பறவைக்கு..
தேடல் ஒரு சுகம்..!!
எல்லாம் தேடும் மனிதனுக்கு..
தேடல் ஒரு கணம்..!!
ஆகாயம் ரசித்து.. ஆண்டாயிற்று..
அடுக்கு மாடியின் விட்டம் ஆகயமாயிற்று..!!
பொன் தேடவும்.. போரும் தேடவும்..
நேரம் ஓடுவதால்..!!
பூக்களும் புன்னகையும்..
புதியவை ஆகிவிட்டன..!!
" கடிகார முட்களில்..
காதல் சிக்கி தவிக்கிறது..!! "
காதலின் இசையோடு.. மழலையின் குரல்..!!
சேரும் போது மனம் கரையும்..!!
அனால்..
இயந்திரத் தன்மையில் இயங்கும் மனம்..!!
கனவுகளை தேக்குகிறது..!!
காலத்தை ஓட்டுகிறது..!!
- சக்கரமில்லாமல்........!!