இலக்கணம் – பகுதி 1 -- தமிழில் தெளிவு

பொதுவாக தமிழில் வரும் ர, ற, எழுத்துக்க்ளின் தடுமாற்றம் குறைக்க உதவும் ஒரு வழிகாட்டும் செயலாக ஒரு எளிய முயற்சி.
தொடர்வதில் ஆர்வம் உண்டு. முயற்சிக்கிறேன். இதையே இன்னும் சீர்படுத்தி மறுபதிவு செய்யும் எண்ணமும் உண்டு.


குறளின் பாகம் அறம்
தமிழர் மாண்பு மறம் (வீரம்)

நெடிய தாவரம் மரம்
பலகையை வெட்டுவது அரம் (ரம்பம்)
பாம்பு எனில் அரவம்


அரசியின் ப்ரத்தியேக தளம் புரம் (அந்தப்புரம்)
முதுகில் பேசுவது புறம்
உள்ளங்கை பின்பகுதி புறம்
பயிருக்கு இடுவது உரம்

சொந்தம் என்பது உறவு

பலகை தருவது மரம்
உழைக்க உதவும் கரம்
தலை என்பதே சிரம்

ஆணியில் சுழல்வதே மரை
திரை போடும் செயலே மறை

மாமிச உணவு இறைச்சி
புனிதம் என்பது இறைமை
கெஞ்சிக்கேள் என்பது இரை
உணவு என்பதும் இரை
முத்துகளை கொட்டுவது இறை
கடுங்காவல் என்பது சிறை

கன்னத்தில் விட்டால் அறை
வீட்டில் இருப்பதும் அறை

ஒன்றில் பாதி அரை
தளம் என்பது தரை

பகுதியாய் இருப்பது குறை
நாய் சத்தம் செய் எனில் குரை

கொடுக்க என்பது தர
தகுதி நிலை என்பது தரம்

“மூடு” எதிர்ப்பதம் திற
செயலாக்கம் என்பது திறமை

தோலை விலக்குதல் உரி
கயிற்றில் தொங்குவதும் உறி

மாமிச உணவு கறி
அடுப்பில் அழிவது கரி

தீயில் கொளுத்து எனில் எரி
தூர வீசு எனில் எறி

தேங்காயில் இருப்பது நாரு
துர்மணம் வீசு எனில் நாறு

பழத்தில் உள்ளது சாறு
ஐயா ஆங்கிலத்தில் சாரு

கட்ட உதவும் கயிறு
உணவு செரிக்கும் பாகம் வயிறு
வயிறு என்பது "இரை"ப்பை

தடு எனில் மறி
சாவு எனில் மரி

இழைத்து வெட்டும் ரம்பம்
தொடக்கம் எனில் ஆரம்பம்

சூடு-தணி எனில் ஆறு
ஐந்துக்கு பின் எண் ஆறு
நீரின் ஓட்டம் ஆறு

ஆகட்டும் எனில் சரி
மகிழ்வாய் இருக்க சிரி
உச்சத்தை
கீழ்தள்ளிவிடு எனில் சரித்துவிடு

மதுரைப்பக்க ஊர் பரவை
வானில் மிதப்பது பறவை

அகல-வை எனில் பரத்து
விண்ணில் அலைந்து எனில் பறந்து

விளக்கமாய் என்பது விரிவாக
அகலமாய் என்பது விரித்து

விலகுதல் எனிலது பிரிதல்
தோல்-விலகுதல் எனிலது உரிதல்
மனதில் நெருடல் எனிலது உறுத்தல்
வாயால் திரவம் இழுத்தல் உறிஞ்சல்

திருப்தி என்பது நிறைவாக
அதன் எதிர்ப்பதம் எனில் அது குறைவாக

குமிழ்நெகிழ் என்பது நுரை
துணித் துவைப்பதில் வருவதே நுரை

சொல்வது என்றால் உரைப்பது
மிளகாயின் சுவை உறைப்பு
மனதில் பதிவதும் உறைப்பது

இருப்பிடம் என்பது உறைவிடம்
இடுப்பில் இருப்பது உறைவாள்
நீர் திடமாவது உறைவது (பனிக்கட்டி)


நீர்நிலை ஓரம் கரை
களங்கம் என்பது கறை

இன்னும் வரும்.....

இதேபோல,
ல, ள, ழ
ந, ன, ண,
குழப்பங்களும் இந்த தளத்தில் அடிக்கடி எதிர்நோக்குகிறேன். அதையும் நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : மங்காத்தா (11-Feb-13, 10:38 pm)
பார்வை : 568

மேலே