எனது மானம் பேருந்து நிறுத்தத்தில் நின்றது
ஒரு மாலைநேரம் எனது அலுவலகத்தை விட்டு என் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தேன் அங்கு ஒரு பேருந்து நிறுத்தத்தில் !!!,
அதை நான் கடப்பதுக்குமுன் ஒரு பெண் அருகில் இருந்தவரை பார்த்து இந்த பேருந்து BTM - போகுமா என்று கேட்டுகொண்டிருந்தால். அவர் சொன்னார் எனக்கு தெரியாதுமா என்று.
அதை நான் கவனித்துக்கொண்டே அந்த பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்றேன். அப்போது என் மனம் சொன்னது அய்யோ பாவம் வழி தெரியாமல் தவிக்கிறாள் உதவு என்று. பின் திரும்பிவந்து அவளிடம் நீங்க BTM - தான போகணும் என்று வினவினேன், பதிலேதும் இல்லை...
அவள் என்னை பார்க்காததுபோல் நின்றுகொண்டிருந்தாள், மீண்டும் நான் கேட்டேன் காது கேட்காதவல்போல் நின்றுகொண்டிருந்தாள்... நான் நினைத்தேன் இவ்வளவு கள் நெஞ்சமா ??? சரி என்று என்மனதை தேற்றிக்கொண்டு நீங்க BTM - தான போகணும் Bus No - 201 என்று சொல்லிவிட்டு சட்டென்று மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். திரும்பி பார்க்கவேயில்லை... கோபத்தின் விளிம்பில் நடந்தேன்...
அந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இன்றும் எப்போதும். அன்று முதல் இன்றுவரை உதவி என்று யார் கேட்டாலும் என் மனம் உதவ முன்வருவதில்லை.
பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கிறதோ இல்லையோ எனது அவமானம் நின்றுகொண்டிருக்கும் அனாதையாக... சொல்லப்போனால் விளம்பரபலகை இல்லாமல் விலைபோனது என் மானம்... எல்லாம் என் விதி என்று வீடு சென்றேன்...
" பெண்களே சிந்தியுங்கள் - நானும் உங்களைப்போல மனிதன்தான் "