நன்றி உரை

தமிழன் எங்கிருந்தாலும் ஒளிரட்டும் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை வாசித்த,
வாசித்து கொண்டிருக்கும் ,வாசிக்க போகும் அனைத்து தோழர்களுக்கும்,தோழிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
படித்ததோடு இல்லாமல் தங்கள் பொன்னான நேரத்தையும் செலவழித்து கருத்தை பகிர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் ராணுவ வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
குறி வைத்து
கல் எறிவேன்
மாமரத்து பழம் நோக்கி
எல்லா எறிதளிலும்
தப்பி தவறியும்
ஒரு பழமும் விழாமல்
எல்லா முறையும்
இலைகள் மட்டுமே விழும்
வீட்டின் கூரையை
தொட்டு பார்க்க
ஆசை பட்டு
எம்பி எம்பி குதிப்பேன்
ஆனால் ஒருமுறையும்
தொட்டதில்லை
மாறாக கீழ் விழுந்து
முட்டிகள் தான் உடையும்
இப்பொழுதெல்லாம்
இரவு நேரங்களில்
குறி வைக்காமலே
வானத்தை நோக்கி
கல் எறிந்தாலும்
இரண்டு மூன்று
நட்சத்திரங்கள் உதிர்கின்றன
சரி குதித்து பார்ப்போம்
என்று எண்ணி குதித்தால்
மேகம் தலையில் தட்டுகிறது
இந்த வளர்ச்சியும் பெருமையும்
நண்பர்களாகிய உங்களையே சேரும்
நன்றி, நன்றி, நன்றி
உங்களோடு சேர்ந்து
உயர உயர
எல்லா திசைகளிலும்
பறக்க
ஆசை கொண்டவனாய்