குருதட்சனை
மூங்கில் கொட்டகையில்
முதல் வகுப்பு ..
அ .. ஆ .. எழுதிகாட்டிய
ரத்தினம் ஆசிரியர் ...
கன்னம் திறுவி
கணக்கு சொல்லிகொடுத்த
மீனாட்சி ஆசிரியை ..
வராத இங்கிலீஷ்
வறுத்தெடுத்த
வெங்கடாசலம் மாஸ்டர் ...
எங்கே இருக்கிறீர்கள்
என் குருக்களே ...
தேடுகிறது மனசு ...
சின்னதாய் பரிசொன்று கொடுக்க ...????