!!!===(((புரட்சி - பாடல்)))===!!!

0====(((தொகையறா)))====0

சிறையுடைத்து
சிரமறுக்க
கரமுயர்த்தி வாடா...
ஈனனென்று
இழித்தவனை
அறுத்தெறிவோம் தோழா...

உரமேற்றி
உடல் தேற்றி
உலகாள வாடா...
உரிமைகளை
பறித்தவனை
சரித்திடுவோம் தோழா...

அதிகாலை
சூரியனாய்
நீயெழுந்து வாடா...
கயவர்களை
கங்குவிழியால்
விரட்டிவிடு தோழா...

வாளேந்தி
வான் போற்ற
புயல்போல வாடா...
நரகர்களை
அக்கினியில்
கொளுத்திவிடு தோழா...

0====(((பல்லவி)))====0

பச்ச குதிர பறக்குது பாரு
வீரம் இருந்தா நேருல மோது
பிஞ்சி மனசுல உரிக்கிற நாறு
சூரப் புலியா மாறுவோம் பாரு...

அனுபல்லவி.
*******************
உச்சி வெயிலுக்கு ஊத்திகடா மோரு
ஊரே சொல்லுமடா நம்முடைய பேரு
ஒன்னா சேர்ந்து நின்னு களமிறங்கி பாரு
நம்மை எதிர்த்து நின்னு ஜெயிக்கிறவன் யாரு

0====(((சரணம் 1)))====0

அதிகாலை சூரியன் போலே
எழுடா தோழா எழுடா
விடியலுக்கே விடியல் தரலாம்
விழிடா கண்ணை விழிடா...
வியர்வை மண்ணில் சிந்துறவரையில்
உழைடா தோழா உழைடா
உழைப்பைசுரண்ட வந்தால் யாரையும்
அடிடா தோழா அடிடா...

வாழ்க்கை வாழ்வதற்கு
துணிந்து எழுந்துவிடு
வழக்குகள் தீர்வதற்கு
வாளை ஏந்திவிடு

0====(((சரணம் 2)))====0

ஆர்பரிக்கும் கடலலை போலே
நடடா தோழா நடடா
அதிகாரப் பேய்களை மண்ணில்
மிதிடா தோழா மிதிடா...
சூறாவளி போலே நீயும்
இருடா தோழா இருடா
சுதந்திரத்தை மறுக்கும் தலையை
உடைடா தோழா உடைடா....

குருதியில் நெய்ததடா
செங்கொடி தோற்காது
தமிழன் வரலாற்றில்
கோழைகள் கிடையாது...

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (26-Feb-13, 11:52 am)
பார்வை : 445

மேலே