"பட்டம் "
"நான் படித்து வாங்கிய பட்டங்கள்
பொட்டலங்களாய் சுருட்டி சுண்டல் விற்க
ஆரம்பித்தன கடற்க்கரயில் அல்ல
நான் படித்த கல்லூரி முன்பு "
பின்,
கல்லூரி பட்டமும் காகித பட்டமும்
சந்தித்தன ஒரே குப்பைதொட்டியில்
நலமா?. விசாரித்தது காகித பட்டம் ,
என்னை கேட்க உனக்கு என்ன தகுதி
வினவியது கல்லூரி பட்டம் ,
கோபத்துடன் காகித பட்டம் ,
என்னை காண்பவர்கள் விண்ணை
காண்கிறார்கள் விண் அழகை ரசிக்கிறார்கள்
உன்னை பெற்றவரும் கையில் கொண்டவரும்
என்ன கண்டார்கள் ? விவாதம் தொடரும்
முன்னே இரண்டையும் அள்ளி சென்றனர்
ஒரே தொழிற்சாலைக்கு.!
பட்டங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தன..