என் நண்பா! நீ எங்கே?
நண்பா!
எப்போதும் சுரக்கும் உவர்ப்புக்கண்ணீர்
உனக்காக சுரந்தால் இனிக்கும் என்னில்
அது
நீ சென்ற வழியோரம் பாத்திருக்கும்
உன் வருகைக்காய் விழியோரம் காத்திருக்கும்
நீ தந்த அன்பிற்கு அளவில்லை
அதை
அளக்க இந்த உலகிலொரு கருவியில்லை
போகுமுன்னே சொல்லாமல் போனதெங்கே?
உன் வருகைக்காய்
ஆனந்தக்கண்ணீரும் தவமிருக்கும்..