வாழ்வை கொண்டாடு

வழிதவறி போனவர்க்கு
வாழ்க்கை ஒரு காடு
வழியறிந்து வாழ்பவர்க்கு
வசந்தமுள்ள வீடு

மொழியுணர்ந்து படிப்பவர்க்கு
முழு அறிவு ஏடு
விழி திறந்து நீ படித்து
வெற்றியதை தேடு

கிலிபிடித்து தவிப்பவர்க்கு
கேவலம் சுடு காடு
எலிபிடிக்கும் பூனையிலும்
ஈனமிவர் பாடு

சலிப்படைந்து மனமுடையும்
சஞ்சலத்தின் கூடு
நலிவடைந்து வாடுமிவர்
நடைவழியை மூடு

உளிசெதுக்கும் சிற்பமென
உனைசெதுக்கி போடு
விளிப்பதற்குள் சேவைசெய்து
விளம்புதலை நாடு

அளிப்பதிலே வள்ளலென
ஆகிவிடு ஈடு
களிப்புடனே வாழ்வதனை
கட்டிகொண் டாடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Mar-13, 10:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 154

மேலே