சமுதாய சீர்கேடு..1
பள்ளி செல்லும் பெண்குழந்தைகள்..
பருவ காலம் வந்த பின்...
பாடம் கற்பிக்கும் சில பட்டதாரிகளே...
பாலியல் தொல்லை தரும் இதை...
சமுதாய சீர்கேடு என்பேனா???
இல்லை ...!
சாதி சமையம் என்னும் சில வெறியால்...
சமமாக வாழத்துடிக்கும் சில மக்களை... சாகடிப்பதை...
இதை ...
சமுதாய சீர்கேடு என்பேனா???
பல உயிர்களை பாதுகாக்க வேண்டிய..
சில மருத்துவர்கள் நோயாளிகளை...
பணம் இல்லாத காரணத்தால்...
பிணம் ஆக்குகின்றனவே...!!
இதை ...
சமுதாய சீர்கேடு என்பேனா???
கல்வி அறிவில்லாத கயவர்கள்...
மருத்துவர்களாக உருமாறி..
மனம் உவந்து பல உயிர்களை அழிக்கின்றனவே..!
இதை..
சமுதாய சீர்கேடு என்பேனா???
சமுதாயத்திற்கு காவலாக இருக்கவேண்டிய ..
சில காவல்துறை கரும்புள்ளிகள்...
கையில் கிடைக்கும் சில சில்லறை பணத்திற்காக..
பல பாவங்களை செய்கின்றனரே....!
இதை தான்..
சமுதாய சீர்கேடு என்பேனா???
இதில் எதை சமுதாய சீகேடு என்பது???
எத்தனை சமுதாய சீர்கேடுகள்????
எண்ணிப்பார்க்க எண்களே போதாது...!!
இவை அனைத்தும் அகல வேண்டும் என்றால்..!!
பல பாவிகள் பலி ஆக வேண்டும்.
புதிதாக பல நல்ல.
எண்ணங்கள் எழும்ப வேண்டும்...!
சமரசம் உண்டாக வேண்டும்..
என்றும் சகோதரத்துவம் ஓங்க வேண்டும்..!!!!