விழிகள் தந்த பாட்டி....

ஐயிரண்டு திங்கள் சுமந்து...
என் முகம் கண்டு நீ பூத்த புன்னகை
கண் மறையவில்லை மகனே...!
உன் பிள்ளை கண்டவுடன்
உவகைதான் மிகையென
வந்து வாடிய உன் முகம் கண்டு...
உக்கித்தான் போனதடா என் கண்கள்...
உலகு காணா விழிகளை
தாங்கி வந்தான் என் பேரன்...
"எப்படி இருப்ப என் பாட்டி?"
கேட்ட பிஞ்சுக் குரலுக்கு...
"இவ்வுலகை நான் கண்டது போதுமடா..
என் விழிகள் கொண்டு
எனைப் பாரடா என் பேரா...!"
உனைக் கண்டு விரியட்டும்
என் மகனின் விழிகள்...!
புகைப்படத்தில் நான் சிரிப்பேன்
உனைக் கண்டு.....!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (3-Mar-13, 10:59 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 139

மேலே