அகதியாய் ஒரு நாள்

கண்ணீரில் நீந்தி வருகிறேன்
அளவு பெரிது ....
கடல் என்றார்கள் அதன் பெயர் ...
காட்டுக்கு வேலி இல்லை என்று நினைத்தேன்
ஆனால்.....
கடலுக்கு வெளி உண்டு என்பதை புரிந்து கொண்டேன்
காக்கி நிற வேலிகள்
வேலியே பயிரை மேயுமா ? என்பார்கள்
மேய்கிறது இந்த வேலிகள்
மேய்ந்ததில் மிச்சம் ஓரிடத்தில் சென்று அடைக்கப்படும் ....
முகாம் என்பார்கள் அதன் பெயர்
அனாதைகளாய் வந்தவர்களுக்கு
அகதிகள் என பெயர் மாற்றம் செய்யப்படும்...
நான் தனியாய் பிறக்கவில்லை
தனியாய் பிரிதெடுக்கப்பட்டேன்...
என் மண்ணில் தானாய்
இறந்தாலும் நான்கு பேர் வருவார்கள்
என் ஆதரவாளர்கள் என்று ...
பிறர் மண்ணில் இறந்தால்
அதே நான்கு பேர் வருவார்கள்
நான் ஒரு அனாதை என்று...
ஒரு பெயரில் பிறந்தேன்
ஏதோ ஒரு பெயரில் வளர்ந்தேன்
இயற்பெயரில் இறக்கவாவது விரும்புகிறேன்...

எழுதியவர் : சுகன்யா பாரதி (3-Mar-13, 8:33 pm)
சேர்த்தது : SuganyaBharathi
பார்வை : 127

மேலே