காவியம் பாட ...
காலங்கள் மூன்று நிலை ,
நீ காவியம் பாட சொன்னது
எந்த நிலை ...
உன்னைப்பார்த்த அந்த நாளை
நினைத்து எழுத்தை கொட்டவா !
நம் கண்கள் இரண்டும் பேசிய
காதலின் அர்த்தத்தை இன்று
கண்ட நாளினை காட்சிப்படுத்தவா !
கெட்டு மேளம் கொட்ட
வாத்தியங்கள் இசைக்க
இருமனங்கள் இணைந்து
இல்லறத்தில் ஈடுபடும்
வரும் நாளை நினைத்து
நம் வாழ்க்கையை
காவியம் படைக்கவா!!!